எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

கார்ப்பரேட் வரலாறு

உங்கள் இதயபூர்வமாக தயாரிப்புகளை உருவாக்கவும், மேலும் இது போன்ற தயாரிப்புகளின் பங்கு மதிப்புகளை சரியான வரையறைகளை உணர்ந்துகொள்ளுங்கள்.

KUBOTA குழுமத்தின் நிறுவனர் Gonshiro Kubota

வார்ப்பு உலோகப் பொருட்களைத் தயாரித்து விற்பதன் மூலம் Kubota தனது தொழிலைத் தொடங்கியது. அதுமுதல், மனித வாழ்க்கை மற்றும் சமூகத்தை மேம்படுத்தப் பங்களிக்கும் பல்வேறு தயாரிப்புகளை நாங்கள் வழங்கியுள்ளோம். எங்களது நீண்ட அனுபவத்தின் மூலம் பெற்ற தொழில்நுட்பத் திறன்களை பரவலாகவும், ஆழமாகவும் மேம்படுத்தவும், நமது வர்த்தக எல்லைகளை விரிவாக்கி, இந்தச் சமூகத்துக்கு அதிகப் பங்களிப்பு செய்யவும் நாங்கள் முயற்சிப்போம்.

1890s - 1940s
1890
வார்ப்படக்களமாக நிறுவப்பட்டது. எடைபோடும் சாதனங்கள் மற்றும் தினசரிப் பொருட்களுக்கான வார்ப்பு இரும்புகளை உற்பத்தி செய்யத்தொடங்கியது.
1893

நீர் விநியோகத்துக்கான வார்ப்பு இரும்புக் குழாய்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. அமகாஸ்கி தொழிற்சாலையை 1917 ல் திறந்து உற்பத்தியை இடமாற்றியது.

1897
ஒய்டே ச்சுஸோ-ஜோ (ஒய்டே வார்ப்புக்களம்)விலிருந்து குபோடா டெக்கோ-ஜோ (Kubota இரும்புப் பணிகள்) என கார்ப்பரேட் பெயரை மாற்றியது.
ஃபயர் ஹைட்ரண்ட் மற்றும் கேட் வால்வுகள் போன்ற நீரைக் கட்டுப்படுத்த உதவும் சாதனங்களின் உற்பத்தியைத் தொடங்கியது.
1922

எண்ணையைக் கொண்டு இயங்கும் விவசாய-தொழில்துறை பயன்பாடுகளுக்கான என்ஜின்கள் உற்பத்தியைத் தொடங்கியது, செட்டன்கி (எரிபொருள் சேமிப்பி: வீணாகும் வாயுவைப் பயன்படுத்தி ஆற்றல் சேமிக்கும் சாதனம்), மற்றும் வெப்பம் தாங்கும் வார்ப்பு இரும்பு.

1930
குபோடா ஆயில் என்ஜினை "அருமையான வீட்டு உபயோகப் பொருள்" என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தேர்ந்தெடுத்தது.
1939
தொடக்க பங்கு விநியோகம். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒரு தொழில்நுட்ப பயிலகம் அமைக்கப்பட்டது.
1947

கல்டிவேட்டரை உருவாக்கி, உற்பத்தி மற்றும் விற்பனையைத் தொடங்கியது.

1950s
1953

கே.கே. Kubota டெக்கோ-ஜோ என்ற கார்ப்பரேட் பெயரை Kubota டெக்கோ என மாற்றியது. குபோடா கென்கியை நிறுவி கட்டுமான சாதன தொழில்துறையில் நுழைந்தது.
பவர் ஷவல்ஸ் மற்றும் பிற கட்டுமான சாதனங்கள் மற்றும் மெரைன் டெக் எந்திரங்களின் உற்பத்தியைத் தொடங்கியது.

1955

"தேசக் கட்டமைப்பு முதல் நெல் உற்பத்தி வரை" என்ற தாரகமந்திரத்தை உருவாக்கியது.

1957
வீடு கட்டுவது தொடர்பான பொருள்களில் முன்னேற்றமடைந்தது. "கலர்பெஸ்ட்" என்ற வீடுகட்ட உதவும் பொருள் உற்பத்தியைத் தொடங்கியது.
1960s
1960

ஜப்பானின் முதல் விவசாய டிராக்டரை உருவாக்கி அதை வணிகப்படுத்தியது.
ஜப்பானில் முதல் முறையாக வெளிநாட்டு நீர் விநியோக திட்டத்துக்கான (ஃப்னோம் பென்ஹ்) ஆர்டரைப் பெற்று பூர்த்தி செய்தது.

1962

"நீர் ட்ரீட்மென்ட் ஆபரேஷன் பிரிவு" நிருவிக்கபட்டது மற்றும் சுற்றுச்சூழல் மேம்படுத்தல் துறையில் முழுமூச்சாக நுழைந்தது.
நெல் வயல் டிராக்டர்கள் உற்பத்தியைத் தொடங்கியது.

1963

விற்பனை எந்திரங்களின் உற்பத்தியை தொடங்கியது.

1964
திடக்கழிவுப் பொருள்களை எரியூட்டும் தொழிற்சாலைகள் உருவாக்கத்துக்கு முயற்சி எடுத்தது.
1969
"மனிதர்களுக்கு வளம்மிக்க சுற்றுச்சூழலை உருவாக்கு" என்ற புதிய கார்ப்பரேட் தாரகமந்திரத்தை வெளியிட்டது.
கம்பைன்கள் (தானிய அறுவை எந்திரம்)உற்பத்தியை தொடங்கியது.
விவசாயத்தை எந்திரமயமாக்குவதற்கான ஒருங்கிணைந்த அமைப்பை பூர்த்தி செய்தது.
1970s
1972
திடக்கழிவு எரியூட்டல் துறையில் முழுமூச்சாக நுழைந்தது US டிராக்டர் சந்தையில் முழுமையாக நுழைவதற்கு, US ல் Kubota டிராக்டர் கார்ப்பரஷேனை நிறுவியது.
1975
"வடிகால் ஆபரேஷன் துறை" தொடங்கப்பட்டது
1980s
1980

எகிப்திலுள்ள ஷாரிகா என்ற மாநிலத்திலிருந்து விவசாய அமைப்புக்கான ஒரு ஆர்டரைப் பெற்றது, பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் பணியில் ஈடுபட்டது.
"தொழில்நுட்பத்தை கொண்டு பதில் அளிக்கும் ஓர் நம்பிக்கையான எதிர்காலம்" என்ற புதிய தாரகமந்திரத்தை ஏற்படுத்தினோம்.

1984
நம்முடைய மனிதக் கழிவு சுத்திகரிப்பு திட்டமான "U-ட்யூப் நைட்ரோ சிஸ்டத்திற்காக" சுற்றுச்சூழல் அமைப்பிடமிருந்து சுற்றுச்சூழல் விருதைப் பெற்றது. "ஹு-டெக்" என்ற தொழில்நுட்ப திட்டத்தை துவங்கியது.
1986
எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டுகள், ஹார்டு டிஸ்குகள், மற்றும் ரேடியோ மூலம் கட்டுப்படுத்தப்படும் புல்வெட்டும் எந்திரங்கள் ஆகியவற்றின் உற்பத்தி தொடங்கியது.
1989
"ஸாஹில் கிரீன்பெல்ட் திட்டம்" மற்றும் "பசுமையான பூமி திட்டம்" போன்ற பாலைவனத்தை பசுமையாக்கும் திட்டங்களில் பங்கேற்றது.
1990s
1990

வியாபாரத்தில் நம்முடைய 100ஆவது ஆண்டைக் கொண்டாடினோம். கார்ப்பரேட் பெயரை குபோடா கார்ப்பரேஷன் என மாற்றினோம். புதிய கார்ப்பரேட் சின்னம் மற்றும் காட்சிமூலம் அடையாளம் காணும் அமைப்பை அறிமுகப்படுத்தினோம்.
சர்வதேச தோட்டம் மற்றும் பசுமையான செடிகள் கண்காட்சியில் "ALEPH" என்ற நீர்பிரிப்பு சாதனத்தையும் நீரூற்றையும் இணைந்து வழங்கினோம்.

1992
"அழகான ஜப்பானை உருவாக்குவோம்"
என்ற புதிய தாரகமந்திரத்தை ஏற்படுத்தினோம்.
கழிவுகளிலிருந்து மின்சாரம் உருவாக்கும் செயல்திறம்மிக்க அமைப்புகளைக் கொண்ட திடக்கழிவு எரியூட்டும் அமைப்புகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகளை தொடங்கினோம். குபோடா கார்ப்பரஷேனின் நன்கொடையுடன் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில், சர்வதேச சுற்றுச்சூழல் திட்ட மையம் றுவப்பட்டது.
1993
"நம்முடைய இரண்டாம் நூற்றாண்டின் வர்த்தகத்துக்கான இலக்கு" என்ற வர்த்தக வழிகாட்டு நெறிமுறைகளை 21 நூற்றாண்டை நோக்கி அறிவித்தோம்.
கான்க்யோ சோஸா மையம் மற்றும் நிக்கான் கோக்யோ நம்முடைய நீரில் மூழ்கியிருக்கும் வகையிலான ஆர்கானிக் ஃபிளாட் மெம்பரேன் கொண்ட வீட்டுக் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புக்கு, ஷிம்புன் டைரக்டர் ஜெனரலின் பரிசும், சுற்றுப்புறசூழல் அமைப்பின் சிறந்த பரிசும் அளிக்கப்பட்டது.(ஜப்பனீஸ் தளத்தில் இல்லை)
1995
தொடர்ச்சியான சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக ஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைவிட கடுமையான தரநிலைகளுடனான, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சுற்றுச்சூழல் தணிக்கை அமைப்புத் தொடங்கப்பட்டது.
1999
நிக்கி தலைசிறந்த தயாரிப்பு/சேவை பரிசு மற்றும் செயல்சிறப்புக்கான நிக்கி ஷிம்புன் பரிசு ஆகியவை நம்முடைய நீரடி டையாக்ஸின் டிகம்போசிஷன் யூனிட் வென்றது.
2000s
2001
நம்முடைய அனைத்து உள்ளூர் நிறுவனங்களும் ISO 14001 சான்றிதழ் பெற்றன.
2002
நம்முடைய தொழில்துறை என்ஜின்களின் ஒட்டுமொத்த தயாரிப்பு 20 மில்லியனை விஞ்சியது.
2005
தலைசிறந்த சுற்றுச்சூழல் சாதன விருதுகளில் பொருளாதார, வர்த்தக தொழில்துறை அமைச்சகத்தின் பரிசை, தெஷிமாவிலுள்ள நம்முடைய வீண்கழிவுகளிலிருந்து மூலப்பொருள் மீட்டெடுக்கும் அமைப்பு பெற்றது. நம்முடைய டிராக்டர்களின் ஒட்டுமொத்த தயாரிப்பு 3 மில்லியனை விஞ்சியது.
2006

KUBOTA குழுமத்தின் "கார்ப்பரேட் இலக்கு அறிக்கை", "மேலாண்மைக் கொள்கைகள்", மற்றும் "செயல்களுக்கான தனியுரிமை", மற்றும் "நடைத்தை விதிமுறைகள்" ஆகியவற்றை உருக்கியது.
புதிய கார்ப்பரேட் தாரகமந்திரங்களை உருவாக்கியது:"நீர், நிலம், காற்று மற்றும் மக்கள் வாழ்க்கைக்காக அடித்தளத்தை ஏற்படுத்துதல்"(முதன்மையான தாரகமந்திரம்). (துணை தாரகமந்திரம்) மற்றும் "அழகான ஜப்பானை உருவாக்குவோம்" (துணை தாரகமந்திரம்)".
தலைசிறந்த சுற்றுச்சூழல் சாதன விருதுகளில் பொருளாதார, வர்த்தக தொழில்துறை அமைச்சகத்தின் பரிசை, நம்முடைய "சீவேஜ் ஸ்லட்ஜ் கான்சென்ட்ரேட்டர்" வென்றது.

USAவில் புதிய செயல்ப்பாட்டு தொழிற்சாலை நிறைவுற்றது.

2008

சமூகத்திற்கு பங்களிக்கும் நடவடிக்கையாக "குபோடா இ-பிராஜக்ட்" தொடங்கப்பட்டது.

2009

தாய்லாந்தில் ஜப்பனீஸ் வேலைக்கான முதல் டிராக்டர் உற்பத்தி நிறைவுற்றது.

இந்தியாவில் டக்டைல் குழாய் உற்பத்தி வசதி நிறைவுற்றது.

2010s
2010
ஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் "இகோ-ஃபர்ஸ்ட் நிறுவனம்" என்ற சான்று பெற்றது.
தாய்லாந்தில் (SIAM குபோடா கார்ப்பொரேஷன்) ஒருங்கிணைந்த கதிரறுக்கும் எந்திரத்தின் உற்பத்தியைத் துவக்கியது.
சீனாவில் (அன்ஹூய் குபோடா சான்லியன் பம்ப்) பம்ப் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தை நிறுவியது.
2011
குபோடா ஒருங்கிணைந்த கதிரறுக்கும் எந்திரமான "PRO688Q", 2010 நிக்கி சுப்பீரியர் ப்ரொடக்ட்ஸ் மற்றும் சர்வீசஸ் விருதுகளில் சீனா சந்தைக்கு உன்னதத் தன்மைக்கான நிக்கி பிசினஸ் டெய்லி விருதுகளை வென்றது.
சீனாவில் மண்டல தலைமையகத்தை நிறுவியது.
இகோ-ப்ரொடக்ட்ஸ் சான்றளிப்பு அமைப்பின் இயக்கத்தைத் துவக்கியது.
சவூதி அரேபியாவில் (குபோடா சவூதி அரேபியா கம்பெனி) காஸ்ட் ஸ்டீல் தயாரிப்புக்கான தொழிற்சாலையை வெற்றிகரமாக நிறுவியது.
சீனாவில் (குபோடா கன்ஸ்ட்ரக்ஷன் மெஷினரி (வூக்ஸி)) கட்டுமான எந்திரத் தொழிற்சாலையை வெற்றிகரமாக நிறுவியது.
ஹாங்காங்கில் (குபோடா ரைஸ் இன்டஸ்ட்ரீ(H.K.)கம்., லிமிட்.) ஜப்பானிய அரிசி இறக்குமதி, மில்லிங் மற்றும் விற்பனையில் விசேஷம் வாய்ந்த ஒரு நிறுவனத்தை நிறுவியது
2012

க்வெர்னிலாந்து AS என்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தி, அதை ஒரு துணை நிறுவனமாக மாற்றியது.
சீனாவில் (குபோடா என்ஜின் (வூக்ஸி) கம். லிமிட்.) என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியது

"குபோடா அடையாளம்" என்ற உலகளாவிய கூட்டு நிறுவனக் கொள்கைகளை நிறுவி, ஒரு புதிய பிராண்டு கூற்று லோகோவை ஏற்றது.
தண்ணீர் சுத்திகரிப்பு பொறியியல் நிறுவனத்தைக் கையகப்படுத்தி, குபோடா காசூய் கார்ப்பொரேஷன் என்ற நிறுவனத்தை நிறுவியது.

2013
தாய்லாந்தில் பாகங்கள் கொள்முதல் செய்வதற்கான நிறுவனமொன்றை நிறுவியது
அமெரிக்காவில் சிறிய டிராக்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவியது.
சிங்கப்பூரில் (குபோடா ரைஸ் இன்டஸ்ட்ரீ (சிங்கப்பூர்) PTE லிமிட்.) ஜப்பானிய அரிசி இறக்குமதி, அரவை மற்றும் விற்பனையில் சிறப்பு வாய்ந்த ஒரு நிறுவனத்தை நிறுவியது
2014

மேட்டு நிலத்தில் விவசாயம் செய்வதற்கான டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்தை ஃபிரான்சில் (குபோடா ஃபார்ம் மெஷினரி யூரோப் S.A.S.) நிறுவியது

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

உங்கள் நாட்டில் Kubota-வைக் கண்டறிக

pagetop