எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

Kubota உலகளாவிய அடையாளம்

தத்துவங்கள்

மிகச்சிறந்த பொருட்களையும் தொழில்நுட்பங்களையும் வழங்குவதற்கு எங்கள் திறமைகள் மற்றும் செயல்திறன்கள் அனைத்தையும் கவர்ந்திழுத்துச் செயலாற்றுவதன் மூலம் சமூக மேம்பாட்டுக்காகப் பணியாற்றுவது.

நிறுவனத்துக்கு செல்வச் செழிப்பையும், பணியாளர்களுக்கு மகிச்சியையும் கொண்டுவரும் நோக்கத்துடன் இன்றைய நாளைக் கட்டமைத்து நாளைக்கான வழியைத் திறந்துவைப்பது.

படைப்பாற்றல் மற்றும் துணிவுடன் அறியாதவற்றைச் சவாலாக ஏற்பது.

1890 ஆண்டில், குபோட்டாவின் நிறுவனரான கோன்ஷிரோ குபோட்டா அவர்கள் தனது 19 வயதில் உலோக வார்ப்பு வியாபாரத்தைத் தொடங்கினார்.
அவரின் நம்பிக்கை: "நீங்கள் கடுமையாக முயற்சி செய்தால், அதை உங்களால் செய்துமுடிக்க முடியும்" மற்றும் "தவறுகளைச் செய்வது பற்றி அச்சப்பட வேண்டாம்", அவர் தன்னுடைய வியாபாரத்தைக் கொண்டு சமூகத்துக்கு பங்களித்தார். அவர் ஜப்பானில் இரும்பு தண்ணீர்க் குழாய்களின் முதல் உற்பத்தியாளர் ஆனார். அதன் பின்னர் அவர் வேளாண்மையில் இயந்திரமயமாக்குதலை செயலில் மெய்ப்பித்துக் காட்டினார்.
"சமூகத்தின் செழிப்பிற்காக நாம் நமது முயற்சிகள் அனைத்தையும் படைப்புக்குள் இடவேண்டும்".
"நமது தயாரிப்புகள் தொழில்நுட்பத்தில் மட்டும் மிகச்சிறந்ததாக இருக்கக்கூடாது, ஆனால் அது சமூகத்தின் நலனுக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும்".
குபோட்டா குழுமமானது நிறுவனரின் நம்பிக்கைகளையும் மூன்று தத்துவங்களையும் மரபுரிமையாகப் பெறுகிறது, தனது பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து வளர்ந்து வருகிறது, மற்றும் தனது வியாபாரத்தை உலகளாவிய அளவில் விரிவுபடுத்தி, ஒரு சமூக-இணக்கமான மற்றும் நம்பகமான நிறுவனமாக இருப்பதைத் தொடர்ந்து வருகிறது.

பிராண்ட் அறிக்கை

"For Earth, For Life" —
குபோட்டா குழுமமானது, இந்த அழகான பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கின்ற அதேவேளையில், மனிதர்களின் வளமான வாழ்க்கைக்கு ஆதரவளிப்பதையும் தொடரவுள்ளதாக வாக்குறுதியளிக்கிறது.

இலக்கு

உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை மனித உயிர்களுக்கு இன்றியமையாதவை.
குபோட்டா குழுமமானது, அதிகமான மற்றும் நிலையான உணவு உற்பத்திக்கு உதவுகின்ற, நம்பகமான தண்ணீரை வழங்கி, மீண்டும் பயன்பாட்டுக்கு எடுக்க உதவுகின்ற மற்றும் தனது மிகச்சிறந்த தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள் வழியாக ஒரு சௌகரியமாக வாழும் சுற்றுச்சூழலை உருவாக்க உதவுகின்ற தயாரிப்புகளை வழங்கி பங்களிப்பதன் மூலம் பூமியின் எதிர்காலத்தையும் மனிதநேயத்தையும் தொடர்ந்து ஆதரிக்கிறது.

உலகமானது மனித உயிர்களுக்கு இன்றியமையாத உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் பல சிக்கல்களைக் கொண்டிருக்கின்றது.
அந்தச் சிக்கல்கள் வேறான கருப்பொருட்கள் அல்ல, ஆனால் அவை ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக தொடர்புகொண்டுள்ளன.
மக்கள் தொகை பெருக்கம் என்பது சுற்றுச்சூழல்சார் மாற்றங்கள் மீது ஒரு பெரிய தாக்கத்தைக் கொண்டுள்ளது, இது நீர் வளங்களுக்கு சிக்கல்களைக் கொண்டுவருகிறது. மேலும் பற்றாக்குறையான உணவு வழங்கலுக்கு வழிவகுக்கிறது. குபோட்டா குழுமமானது உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஒரு ஒருமையான கருப்பொருளாகக் கருதுகிறது மற்றும் இந்தப் பகுதிகளிலுள்ள சிக்கல்களைத் தீர்த்துவைக்கப் பங்களிக்கிறது.

KUBOTA GLOBAL LOOP (குபோட்டா உலகளாவிய வளையம்) = உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள்
உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை வேறான கருப்பொருட்கள் அல்ல, ஆனால் அவை ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக தொடர்புபட்டுள்ளன.

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

உங்கள் நாட்டில் Kubota-வைக் கண்டறிக

pagetop