தயாரிப்புகள்
உணவு, தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் தொழில்துறையில் முன்னணியில் உள்ள பலவகையான தயாரிப்புகளை Kubota வழங்குகிறது.
விவசாயம்
விவசாயக் கருவிகளின் முழுமையான தயாரிப்பாளர் மற்றும் முன்னணியில் உள்ள நிறுவனம் என்ற முறையில், உறுதியான சேவைகளுடன், பல்வேறு வகை விவசாயப் பயன்பாடுகளை எதிர்கொள்ளும் டிராக்டர், கம்பைன் மற்றும் நெல் நடவு எந்திரம் போன்ற பல எந்திரங்களை Kubota வழங்குகிறது.
நீர்
1890 முதல் நீண்டகால அனுபவத்துடன், மேல்நிலை முதல் கீழ்நிலை வரையிலான தண்ணீர் தீர்வுகளை Kubota வழங்குகிறது. பொறியியல், கொள்முதல், கட்டுமானம் முதல் பராமரிப்பு வரை, எங்களது பரந்த அனுபவம் நீரின் பத்திரம் மற்றும் பாதுகாப்புக்குப் பங்களிக்கிறது.

வாழ்க்கை முறை
எங்களது வாடிக்கையாளர்களின் அன்றாட வாழ்வுக்கு உதவி செய்யும் விதமாக, இல்லத்து வாடிக்கையாளர்களுக்கான பல்வேறு எந்திரங்களை Kubota வழங்குகிறது.
தயாரிப்பு மற்றும் தீர்வு வரிசை
டிராக்டர்
பல்வேறு பயன்பாடுகளுக்கு செயலாற்றல் மிக்கதாக உள்ள சிறியது முதல் பெரிய அளவுடைய டிராக்டர்கள் வரை, தயாரிப்புகளின் முழுமையான தெரிவை Kubota வழங்குகிறது.
கம்பைன் & நெல் நடவு எந்திரம்
நம்பகமான எங்களது கம்பைன்கள் & நெல் நடவு எந்திரங்கள் கூடுமானவரை அதிகமான விவசாயிகளுக்கு உதவக் கிடைக்கிறது, அது கூடுதலாக அதிக நெல் மணிகளை உற்பத்தி செய்கிறது.
பயன்பாட்டு வாகனம்
வாடிக்கையாளர்களால் உயர்வாக மதிப்பிடப்படும் நமது வாகனங்கள் யாவும் பண்ணைகள், தொழிற்சாலைகள், பூங்காக்கள் மற்றும் பல இடங்களில் வெவ்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
புல்தரை கருவி
இல்லப் பயன்பாடுகள் முதல் தொழில்சார் பயன்பாடுகள் வரை, எங்களது புல்தரைச் சாதனங்கள், ஆற்றல் மற்றும் உயர் செயல்திறனுக்காக உலகம் முழுவதும் புகழ் பெற்றவை.
கட்டுமான எந்திரங்கள்
மிகப்பெரிய சந்தைப் பங்குடன், எங்களது மினி எக்ஸ்கவேட்டர்கள், வீல் லோடர்கள் மற்றும் காம்பாக்ட் ட்ராக் லோடர்களின் இருப்பு தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளது.
என்ஜின்கள்
எங்களது உயர்ந்த செயலாற்றல், கச்சிதமான மற்றும் எடை குறைவான என்ஜின்கள் உலகச் சந்தையில் அதிகளவு நம்பிக்கையைப் பெற்று வருகின்றன.
எடையிடல் & அளவிடல் கட்டுப்பாட்டு அமைப்புகள்
Kubota வின் மூலமான நமது எடை போடுதல் & அளவிடும் கட்டுப்பாட்டு அமைப்புகளில், நடைமுறைப் பயன்பாட்டுக்காக நவீன தொழில்நுட்பங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
வளையும் தன்மையுள்ள இரும்புக் கம்பிகள்
எங்களது நீண்ட தொழில்நுட்ப அனுபவமானது மிகச்சிறந்த உறுதி, தாங்குதிறன் மற்றும் துரு எதிர்ப்புத் திறனுடைய நீளும் இரும்புக் குழாய்களைச் சாத்தியமாக்கியது.
வால்வுகள்
பல்வேறு மாடல்கள், உள்ளமைவுகள் மற்றும் அமைப்புகளுடன் எங்களது வால்வுகள் வெவ்வேறு நோக்கங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
பம்புகள்
எங்களது பம்புகள் தண்ணீர் சப்ளை, கழிவு நீர், மழை நீர் வடிகால், மின்சக்தி உற்பத்தி, எஃகு உற்பத்தி மற்றும் பலவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
சுற்றுச்சூழல் சாதனங்கள் & தொழிற்சாலை பொறியியல்
தேவையான சாதனங்கள் மற்றும் பொறியியல் திறன்களை வழங்கி, விரிவான தண்ணீர் தீர்வுகளை Kubota வழங்குகிறது.
மெம்பரேன் தீர்வுகள்
Kubota உயர்ந்த அளவிலான தொழில்நுட்பத் திறனைக் கொண்டுள்ள அதேசமயம், பயன்பாடுகளின் எண்ணிக்கை மற்றும் அனுபவங்களை அதிகரித்துள்ளது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (Johkasou)
தனது தனியுரிமையான மெம்பரேன் தனிப்படுத்தல் அமைப்புகள் உட்பட, பரந்த அளவிலான தயாரிப்புகளை Kubota வழங்குகிறது.
மூலப்பொருட்கள்
பல்வேறு உருவார்ப்பு முறைகளால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு, பல்வேறு பயன்பாடுகளுக்கான பொருட்களை Kubota வழங்குகிறது.