எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

விவசாயம்

 • வறண்ட நில விவசாயம் முதல் நெல் விவசாயம் வரையிலான உங்களது கூட்டாளி

  “வறண்ட நில விவசாயம்” மற்றும் “நெல் விவசாயம்” ஆகிய இரண்டுக்கும் முழுமையான கருவிகளை வழங்கும் உலகிலுள்ள ஒரு சில நிறுவனங்களில் Kubota-வும் ஒன்று. தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலமாக விவசாயத்துக்கான தீர்வுகளை வழங்குவதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு Kubota உதவியுள்ளது, தொடர்ந்து உதவுகிறது. எங்களது விவசாய எந்திரங்களின் வரலாறுதான், ஜப்பானில் விவசாயத் தொழில்துறையின் பரிணாம வளர்ச்சியின் வரலாறு ஆகும், மேலும் இந்தத் துறையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்குப் பங்களிக்க உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. பிறநாடுகளில் விவசாயத்தை அடுத்த நிலைக்கு உயர்த்த உதவுவதன் மூலம், Kubota இந்த உணர்வை வெளிநாடுகளுக்கும் விரிவடையச் செய்து வருகிறது. Kubota-வின் பண்புகளில் ஒன்று நேரடியான அணுகுமுறை ஆகும். விவசாயிகள், ஒப்பந்ததாரர்கள், தோட்டக்காரர்கள் ஆகியோர் அவர்தம் வயல்களை நிர்வகிக்கத் தேவையானவற்றை உருவாக்கி, ஆதரவளிக்க நாங்கள் அவர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம். விவசாய எந்திரத் தயாரிப்பாளராக இல்லாமல், ஒரு “விவசாய நிறுவனம்” என்ற முறையில், Kubota தொழில்துறையின் அடுத்த நிலையை வடிவமைக்க அவர்களுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்.

  Pick Up
  130 க்கு மேற்பட்ட குதிரை சக்தி உடைய M7 – டிராக்டர்

  பெரிய அளவிலான, வறண்ட நில விவசாயத்துக்கு நமது புதிய M7 வரிசை டிராக்டர் ஒரு முன்னோடி மாதிரியாகும், இது 130 —170 க்கு இடையிலான குதிரை சக்தியுள்ள சக்தி வாய்ந்த என்ஜினை கொண்டுள்ளது. மே 2013ல் கையகப்படுத்தப்பட்ட நார்வே நாட்டு டிராக்டர் கருவித் தயாரிப்பாளரான Kverneland AS உடன் சேர்ந்து ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் பெரிய அளவிலான வறண்ட நில விவசாயக் கருவிகள் தொழிலை விரிவடையச் செய்ய Kubota நோக்கம் கொண்டுள்ளது.

 • நெல் விவசாய நிபுணர்

  னது வரலாறு முழுவதும் அரிசியை பிரதான உணவாகக் கொண்ட ஜப்பான் நாட்டில் தோன்றிய ஒரு நிறுவனமான Kubota, நெல் விவசாயத் துறையில் ஒரு சிறப்பு நிபுணராகும். Kubota-வின் புதுமையான விவசாயத் தொழில் நுட்பங்கள் விவசாயிகளுடன் இணக்கமாக இருந்தது. அவர்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் நெருக்கமாகக் கேட்டறிந்து, அவர்களின் வாழ்வுகள் சிறக்கச் செய்ய எங்களால் என்ன செய்ய இயலும் என, எங்களுக்கு நாங்களே பேரார்வத்துடன் சவால் விட்டோம். இதன் விளைவாக; “நாற்று வளர்ப்பு”, “உழுதல்”, “நடுதல்”, “அறுவடை செய்தல்”, “உலர்த்துதல்”, “உமி நீக்குதல்”, “நெல் அரைத்தல்” போன்றவை முதல் “பதப்படுத்தல்” வரை என பலவற்றை Kubota உள்ளடக்கியுள்ளது. “சமைப்பதற்கான” சிறந்த முறையும் ஆராய்ச்சி செய்து, உருவாக்கப்பட்டது. நெல் விவசாய நிபுணராக, Kubota தானாக தொடர்ந்து புதுமை படைக்கிறது.

  Pick Up
  அரிசி சமைக்க “ரைஸ்-ரோபோ”

  நல்ல தரமான அரிசியை வழங்குவது முக்கியம் ஆனால், அரிசியில் நிபுணர் எனும் முறையில், அதை சுவையாகச் சமைப்பது எப்படி என்பதை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதும் எங்களின் நோக்கமாகும். மிகச் சிறந்த செயல்திறனுடன் இயங்கும் “ரைஸ்-ரோபோ” என்னும் வணிக ரீதியான தானியங்கி அரிசி சமையல் அமைப்பை Kubota உருவாக்கியது. அது ஏற்கனவே, ஜப்பானுக்கு வெளியே உள்ள ஹாங்காங் போன்ற பகுதிகளில் கடினமாகப் பணியாற்றி வருகிறது.

 • ஐசிடி உடன் அடுத்த தலைமுறை மீதான தொலைநோக்கு

  Kubota, ஐசிடி-ஐ (தகவல் & தகவல்தொடர்பு தொழில்நுட்பம்) விவசாயத்துக்கு அறிமுகப்படுத்தியது. ஐசிடி-ஐ பயன்படுத்தும் எங்களது புதுமையான அமைப்பான KSAS (Kubota ஸ்மார்ட் அக்ரிகல்சர் சிஸ்டம்), Kubota-வின் விவசாய எந்திரத்திலிருந்து தரவுகளைச் சேகரித்து, அதிக மகசூல் மற்றும் நல்ல தரத்துடன் கூடிய நெல் சாகுபடியை அதிகரிக்க உதவ அந்தத் தரவுகளைப் பயன்படுத்துகிறது. Kubota-வின் உயர் செயல்திறனுடைய எந்திரம் மற்றும் ஐடி தொழில்நுட்பம் ஆகியவற்றின் இணைவு “இலாபகரமான விவசாய மேலாண்மை” என்பதை உண்மையாக்கும் புதுமையான ஒரு தொழில்நுட்பத்துக்கு வழிவகுத்துள்ளது. இன்று, குறையும் பிறப்பு விகிதம் மற்றும் வயதான மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றை ஜப்பான் எதிர்கொள்கிறது. இதன் விளைவாக, விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது, இது ஜப்பானின் விவசாயத் துறையில் தீவிரமான ஒரு பிரச்சினையாகக் கருதப்படுகிறது. இது போன்ற ஒரு தொழில்நுட்பத்தால், விவசாயம் என்பது இலாபகரமானதாகவும், திறன்மிக்கதாகவும் மாறினால், நம்மால் இளைய தலைமுறையை ஈர்க்க இயலலாம். விவசாயத்தின் அடுத்த தலைமுறைக்கான அடித்தளத்தை உருவாக்குவது எப்பொழுதும் நமது சவாலாக இருக்கும்.

  Pick Up
  கம்பைன், அரிசியை சுவைக்க இயலும்

  Kubota—வின் ஹார்வெஸ்டர்களில் ஒரு சில வகைகளில், நெல் மணிகளில் உள்ள, அரிசியின் சுவையைப் பாதிக்கின்ற நீர் மற்றும் புரதத்தின் அளவைக் கண்காணிக்கும் சென்சார்கள் உள்ளன. இவ்வாறு, ஹார்வெஸ்டர்கள் அரிசியின் சுவையை உள்ளவாறே அறிகின்றன. இதற்கும் மேல், அவை சேகரித்த தரவுகளின் அடிப்படையில் சுவையான அரிசியை வழங்கக்கூடிய நெல் வயல் எங்கே உள்ளது என்பதைக் கண்டறிய Kubota-வின் கம்பைன் எந்திரத்தால் இயலும்.

 • விற்பனைக்குப் பிந்தைய நம்பகமான பாகங்கள், சேவைகள் மற்றும் பராமரிப்பு

  விற்பனைக்குப் பிந்தைய பாகங்கள் என்பது Kubota-வின் உலகளாவிய தொடரமைப்பு மூலம் நமது வாடிக்கையாளர்களுக்கு, தயாரிப்புகளின் பணிநேரத்தை அதிகரிப்பதற்கானதாகும். ஒவ்வொரு உள்ளூர் சந்தையிலும் பொருட்களின் இருப்பை மேம்படுத்தி, நிரப்பு விகிதத்தை அதிகரிப்பது மூலம் எங்கள் வாடிக்கையாளர்களை மனநிறைவடையச் செய்ய நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம்.
  உயர்ந்த செயல்பாடு மற்றும் செயல்திறனுடனும், நீண்ட ஆயுளுடனும் உங்கள் பொருட்களை தொடர்ந்து இயங்கச் செய்வதற்கு உங்களுக்குச் சேவை புரிய Kubota உள்ளது.

  Pick Up
  சீனா — ஒப்பந்ததாரர்களின் சிறப்பான பயணத்துக்கு உதவுகிறது

  சீனாவில், அகன்ற பயிர் வயல்களின் காரணமாக, விவசாயிகளால் தாங்களே அறுவடை செய்ய இயலாத இடங்களில் ஒப்பந்ததாரர்கள் உதவுகிறார்கள். அவர்கள் தங்களது டிரக்குகளில் கம்பைனை ஏற்றிக்கொண்டு வடக்கிலிருந்து தெற்காகப் பயணிக்கிறார்கள். ஒப்பந்ததாரர்களின் பயன்மிக்க பயணத்துக்கு உதவ, Kubota உதவிக் குழுவினர், அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, ஹார்வெஸ்டர்களில் பிரச்சினை ஏற்படும் போது சேவைகளை வழங்குவார்கள். இதற்கும்மேல், சிலசமயங்களில் அறுவடை குறித்தும் அவர்களது பயணத்துக்குச் சிறந்த பாதைகள் குறித்தும் ஆலோசனைகளை Kubota அவர்களுக்கு வழங்குகிறது.

வரிசை

தலைப்புகள்

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop