எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

என்ஜின்கள்

நாங்கள் 1923-இல் 3 குதிரைசக்தி உடைய டைப் A விவசாய மற்றும் தொழிற்சாலை என்ஜினை ஆராய்ச்சி செய்து உருவாக்கியபோது Kubota-வின் எண்ணற்ற தயாரிப்பு வரிசையில் என்ஜின்கள் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு எங்களது என்ஜின்கள் பல்வேறு பயன்பாடுகளுக்காக விரிவாக்கப்பட்டன, மேலும் அதிக ஆற்றல் வெளியீடு, கச்சிதமான மற்றும் எடைக்குறைவான என்ஜின்கள் உலகளாவிய சந்தையில் அதிகளவு நம்பிக்கையைப் பெற்றுள்ளன.
காம்பாக்ட் டீசல் என்ஜின் தயாரிப்பில் உலகின் உயர்தர நிறுவனங்களில் நாங்களும் ஒருவர் ஆவோம், மேலும் 19 கிலோவாட் (25 HP) திறனுக்கும் குறைவான என்ஜின்களுக்கான U.S. CARB ULGE* வெளியீட்டுக் கட்டுப்பாடுகளைப் பூர்த்திசெய்த முதல் உற்பத்தியாளர் என்பதற்காகவும் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். பரந்த வகையிலான தொழிற்சாலை என்ஜின்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய, 86.4 கிலோவாட்டுக்கும் குறைவாக, அதே தளத்தில், டீசல், கேஸோலின் · எல்பிஜி · இயற்கை எரிவாயு போன்ற பல்வேறு எரிபொருள்களில் இயங்குபவற்றின் ஸ்பாட்லெஸ் அவுட்புட் அஸார்ட்மெண்டை உருவாக்கியுள்ளோம்.
Kubota என்ஜினின் மிகப்பெரிய அனுகூலம் எதுவென்றால், சுற்றுச்சூழல் தேவைகளுக்குப் பதில்வினை புரிவதற்கான தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டுப் பொறியியல் ஆகும். சிறு தொழிற்சாலை என்ஜின்களாக 1993-இல் உலகிலேயே முதன் முறையாக, வெளியீட்டுக் கட்டுப்பாடுகளுக்கான CARB சான்றளிப்பு (California Air Resources Board, USA) கிடைக்கப்பெற்றது முதல், சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக உலகம் முழுவதிலும் உள்ள கடுமையான வெளியீட்டுக் கட்டுப்பாடுகளுடன் நாங்கள் எப்பொழுதும் இணங்கியுள்ளோம்.
இன்று, உலகெங்கிலும் உள்ள சாதனத் தயாரிப்பாளர்களுக்கு சரியான சமயத்தில் என்ஜின்களை வழங்குவதற்காக எங்களது உற்பத்திச் செயல்பாடுகளை உகந்த அமைவிடங்களுக்கு விரிவுபடுத்தி வருகிறோம். 2014 முதல், நாங்கள் தாய்லாந்துடன் கூடுதலாக சீனாவிலும் உற்பத்தியைத் தொடங்கினோம், அங்கு எங்களது ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தியானது, வார்ப்புப் பொருட்கள் தயாரிப்பு முதல் என்ஜின் வார்ப்பு மற்றும் அசெம்பிளி வரை முழுச் செயல்முறையையும் உள்ளடக்கியுள்ளது. உலகம் முழுவதும் Kubota-வின் தரத்தை வழங்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்.

 • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

அம்சங்கள்

வழங்கும் என்ஜின்கள் உலகளாவிய வெளியீட்டுக் கட்டுப்பாட்டை பூர்த்தி செய்கிறது

உலகளாவிய சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், தொழிற்சாலை என்ஜின்களுக்கான வெளியீட்டுத் தரங்கள் மேலும் கடுமையாகியுள்ளன. தொழிற்சாலைச் சாதனத் தயாரிப்பாளர்கள் அனைவரும் இப்பொழுது வெளியீட்டுச் சான்றளிக்கப்பட்ட என்ஜின்களைப் பயன்படுத்தத் வேண்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில், முன்னணி தொழிற்சாலை என்ஜின் தயாரிப்பாளராக, உலகம் முழுவதிலும் உள்ள வெளியீட்டுக் கட்டுப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் என்ஜினையே Kubota எப்பொழுதும் உருவாக்கியுள்ளது. 56kW முதல் 86.4 kW வரையுள்ள காம்பாக்ட் டீசல் எஞ்ஜின்களின் முழு வகையையும் Kubota வழங்குகிறது, இவை EPA/CARB டயர் 4 (டயர் 4 இறுதி உட்பட) மற்றும் EU ஸ்டேஜ் IV தரநிலைகளை எதிர்கொள்கிறது.

வார்ப்புத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயர் தரம்

Kubota, கேஸ்டிங் வியாபாரத்துடன் 1890-இல் உருவாக்கப்பட்டது. கேஸ்டிங் தொழில்நுட்பமானது, எஞ்ஜின்கள் உட்பட பல்வேறு தயாரிப்புகளுக்கான எங்கள் பிரதான தொழில்நுட்பங்களின் ஒன்றாகும். கேஸ்டிங் தொழில்நுட்பத்துடன், சிக்கலான வடிவமைப்பைக் கொண்ட கிராங்க்கேஸை Kubota-வால் உருவாக்க முடிகிறது, இது எங்கள் எஞ்ஜின்களை அதிக செயல்திறனுடனும் அதிகம் நீடித்து உழைக்கும்படியும் பராமரிக்கிறது.

வரிசை

எங்களது என்ஜின்கள் கேஸோலின், எல்பிஜி மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றுடன் இணங்கத்தக்கவை.

 • V3800-TIEF4
  (டீசல்)
 • V2403
  (டீசல்)
 • D1305
  (டீசல்)
 • D902
  (டீசல்)
 • WG3800-E4
  (கேஸோலின், எல்பிஜி, இயற்கை எரிவாயு)
 • WG2503
  (கேஸோலின், எல்பிஜி, இயற்கை எரிவாயு)
 • WG1605
  (கேஸோலின், எல்பிஜி, இயற்கை எரிவாயு)
 • WG972
  (கேஸோலின், எல்பிஜி, இயற்கை எரிவாயு)

எங்கள் தொழில்நுட்பங்கள்

 • கூல்டு எக்ஸாஸ்ட் கேஸ் ரீசர்க்குலேஷன் (EGR)
  கூல்டு எக்ஸாஸ்ட் கேஸ் ரீசர்க்குலேஷன் (EGR) என்பது NOx குறைப்பு, குறைவான எரிதல் வெப்பநிலை ஆகியவற்றை உருவாக்கிய வெளியீட்டு வாயு மேலாண்மைத் தொழில்நுட்பம் ஆகும்.
 • காமன் ரெயில் சிஸ்டம் (CRS)
  காமன் ரெயில் சிஸ்டம் (CRS) என்பது NOx & PM குறைப்பு, திறன்மிக்க எரிதல் மற்றும் மேம்பட்ட செயல்திறன் ஆகியவற்றை உருவாக்குகிறது
 • டீசல் ஆக்ஸிடேஷன் கேடாலிஸ்ட் (DOC), டீசல் பார்டிகுலேட் ஃபில்டர் (DPF)
  டீசல் ஆக்ஸிடேஷன் கேடலிஸ்ட் (DOC), டீசல் பார்டிகுலேட் ஃபில்டர் (DPF) ஆகியவை PM(Particulate Matter) ட்ரேப்கள், இயங்காத/இயங்கும் மறுஉற்பத்தி மற்றும் சுத்தமான வெளியீடு ஆகியவற்றை உருவாக்குகின்றன
 • என்ஜின் கன்ட்ரோல் யூனிட் (ECU)
  என்ஜின் கன்ட்ரோல் யூனிட் (ECU), சுத்திகரிப்புக்குப் பிந்தைய கட்டுப்பாடு மற்றும் நிர்ணயத்தை சாத்தியமாக்குகின்ற ஒருங்கிணைந்த என்ஜினை உருவாக்குகிறது.

பயன்பாடு

விவசாய எந்திரம்

கட்டுமான எந்திரம்

புல்தரை கருவி

பவர் ஜெனரேட்டர்

மற்றும் இதர தொழிற்சாலை இயந்திரங்கள்

உங்களது ஊரில் இந்தத் தயாரிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு:

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop