எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

வளையும் தன்மையுள்ள இரும்புக் கம்பிகள்

வளைதன்மையுள்ள இரும்புக் கம்பிகளின் தோற்றம் 1890-களுக்கு இட்டுச் செல்கிறது. அந்தச் சமயத்தில், ஜப்பானுக்குள் பல்வேறு தொற்றுநோய்கள் பரவின. இது நமது நிறுவனரான Gonshiro Kubota அவர்களை ஜப்பானில் முதல் இரும்புக் குழாய்களை உற்பத்தி செய்யத் தூண்டியது. அது முதல், நமது நீண்ட தொழில்நுட்ப அனுபவம், நீர்வழங்கல் உள்கட்டமைப்புக்கு இன்று முக்கியக் கூறுகளாக உள்ள மிகச்சிறந்த வலிமை, உறுதி மற்றும் துரு எதிர்ப்பு ஆகிய பண்புகள் உள்ள வளைதன்மையுள்ள இரும்புக் கம்பிகளைச் சாத்தியமாக்கியது.
Kubota, விரிவான வரிசையிலான தயாரிப்புகளை வழங்குவதில், ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நிலைத்திருக்கும் அனுபவம் பெற்ற தனது தனியுரிமை வார்ப்புத் தொழில் நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்துகிறது: பல்வேறு அளவு விட்டங்களை உடைய வளைதன்மையுடைய இரும்புக் கம்பிகள் (DN80–DN2,600), பூகம்பத்தை எதிர்த்து நிற்கும் இணைப்புகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இணைப்புகள் போன்ற உயர் செயல்பாட்டு இணைப்புகள். நமது மையவிலக்கு வார்ப்புரு தொழில்நுட்பமே, உலகிலேயே முதன்முதலாக நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது, இதுவே உயர்தரமிக்க பெரிய அளவிலான வளைதன்மையுடைய இரும்புக் கம்பிகளை வழங்குதல் மற்றும் அவற்றின் நிலையான உற்பத்தியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
இந்த பைப்புகள், நிலையான நீர் வழங்கலுக்குப் பங்களிக்கும் விதமாக தொடக்கத்தில் ஜப்பானுக்கு வெளியே ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்று உலகில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இரும்புக் கம்பிகள் நாங்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். உலகின் மிகநீளமான ஒன்பது மீட்டர் பைப்புகளின் முக்கிய இலக்கிடமான மத்திய/அருகிலுள்ள கிழக்கில் Kubota தயாரிப்புகள் தங்களது தரம் மற்றும் பணித்திறனுக்காகப் பாராட்டப்படுகின்றன. விரைவாக வளர்ந்துவரும் தென்கிழக்கு ஆசியாவில், ODA செயல்திட்டங்கள் மூலம் உள்கட்டமைப்பின் முன்னேற்றத்துக்கு Kubota பங்களித்து வருகிறது.
மேலும், ஜப்பானில் பெற்ற அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை சாதகமாகக் கொண்டு, பைப்புகளை வழங்குபவர்களாக மட்டுமல்லாமல், பைப்லைன்களை வடிவமைத்தவர்களாகவும் நாங்கள் துடிப்புடன் செயல்படுகிறோம். உலகம் முழுவதும் அதிகம் நம்பகமான மற்றும் திறன்மிக்க நீர் வழங்கல் உள்கட்டமைப்புக்குப் பங்காற்றுவதை Kubota தொடரும்.

 • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

அம்சங்கள்

மிக அதிகப் பலம் மற்றும் உயர்ந்த உறுதித்தன்மை

Kubota-வின் வளைதன்மையுள்ள பைப்புகள் தனது சிறந்த பலம் மற்றும் உயர்ந்த உறுதிக்குப் புகழ்பெற்றது. அவற்றின் பலம் மற்றும் வளைதன்மை உட்புற மற்றும் வெளிப்புற அழுத்தத்துக்கு எதிராக அதிக அளவு பாதுகாப்பை வழங்குகிறது. மேலும், மையவிலக்கு காரை உட்பூச்சு வார்ப்பு மற்றும் எபாக்ஸி ரெசின் எனாமல் மற்றும் வார்னிஷ் அதிக உறுதியை சாத்தியமாக்கியது.

பலவகை இணைப்புகள் மற்றும் தடிமன்

பல்வேறு தேவைகள் மற்றும் நிலைகளை எதிர்கொள்வதற்காக, பலவகை இணைப்புகள் மற்றும் தடிமனை Kubota வழங்குகிறது. கட்டுப்படுத்தப்பட்ட இணைப்புகள் மற்றும் பூகம்பத்தை எதிர்த்து நிற்கும் இணைப்புகள் உட்பட, இணைப்பு வடிவமைப்பின் செழுமை மற்றும் பைப்புகளின் வேறுபாடு காரணமாக, சிக்கனமான மற்றும் அறிவார்ந்த பைப்லைன் கட்டமைப்பை Kubota திட்டமிட முடிந்தது.

எளிதான பராமரிப்பு

பூமிக்குள் புதைக்கப்பட்டுள்ள தொலைவின் அடிப்படையிலும், பூகம்பத்தின் போதும் வளைதன்மையுள்ள எங்களது இரும்புக் கம்பிகள் மிகக் குறைவான விபத்துகளையே எதிர்கொள்கின்றன. இந்த பைப்புகளுக்கு விபத்து ஏற்படும் சமயத்தில்கூட அவற்றைப் பராமரிப்பது எளிதானது, அவற்றைக் குறைவான நேரத்தில் சரிசெய்ய இயலும்.

வரிசை

Kubota-வின் வளைதன்மையுள்ள இரும்புக் கம்பிகள் பல்வேறு அளவுகளில், பல்வேறு தேவைகளுக்காகக் கிடைக்கப் பெறுகின்றன.

 • Flexible Joint
 • Restrained Joint
 • Jacking Pipe
 • Flanged Joint
 • Earthquake Resistant Joint

எங்கள் தொழில்நுட்பங்கள்

 • பூகம்பத்தை எதிர்த்து நிற்கும் நீர்க் குழாய்கள்: GENEX
  பூகம்பத்தை எதிர்த்து நிற்கும் நீர்க் குழாய்களின் பண்பு என்னெவென்றால் ஒரு பூகம்பம் ஏற்பட்டால் கூட, வெவ்வேறு குழாய்களுக்கு இடையில் உள்ள இணைப்புகள் விரிவடைந்து சுருங்கும் மற்றும் இணைப்புகளில் திசை மாறும். ஒரு சங்கிலி மீது பிரயோகிப்பதைப் போல, வலிமையான ஒரு சக்தி பிரயோகிக்கப்பட்டாலும் இந்த இணைப்புகள் தனியாக வராது. மிகப்பெரிய ஹான்சின் பூகம்பம் (1995) மற்றும் மிகப்பெரிய கிழக்கு ஜப்பான் பூகம்பம் (2011) ஆகியவற்றின்போது பூகம்பத்தை எதிர்த்து நிற்கும் இந்தக் பைப்புகளின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டது. நிலம் உள்வாங்கிய பகுதிகளில் அல்லது வெடித்துப் பிளந்த பகுதிகளில் கூட சேதாரம் எதுவும் இல்லை. இதன் மிகச் சமீபத்திய மாடல்“GENEX” என்றழைக்கப்படுகிறது. இதன் பெயர் “அடுத்த தலைமுறை” என்பதிலிருந்து பெறப்பட்டது. பூகம்பத்தை எதிர்த்து நிற்கும் வளைதன்மையுடைய அடுத்த தலைமுறை இரும்புக் கம்பிகளே, குறைவான செலவு, அதிக நிறுவுதன்மை மற்றும் நீடித்த ஆயுளைப் பெறுகிறது, அதே சமயம் பூகம்பத்துக்கு மிக உயர்ந்த எதிர்ப்புத் திறனை வழங்குகின்றன.
 • முன்னேறிய துரு எதிர்ப்பு அடுக்கு
  “நீடித்த பணி ஆயுளை” பெறுவதற்காக Kubota தனித்தன்மையுடைய பல்அடுக்கு துரு-எதிர்ப்புப் பூச்சை GENEX —க்காக உருவாக்கியுள்ளது. இந்த துரு எதிர்ப்புப் பூச்சுத் தொழில்நுட்பம் 70 வருடங்களுக்கு மேலும், இரும்புப் பகுதிகள் 30 வருடங்களுக்கு மேலும் நிலைத்திருக்கும், இது GENEX குழாயின் எதிர்பார்க்கப்படும் ஆயுளை 100 வருடங்களுக்கும் மேல் ஆக்கியுள்ளது.
 • தளப்புதுமைச் சிந்தனை மூலம் தானியங்கு கட்டுமானம் மற்றும் சோதனை
  மனிதவளமின்மை, சாலை நிலைகளின் காரணமாக ஏற்படும் சிக்கல்கள், ஆவணப்படுத்தல் செயல்பாடுகளின் காரணமாக நீளும் கட்டுமானக் காலம் போன்றநீர்க் குழாய் கட்டுமானம் தொடர்புடைய பிரச்சினைகளை ஜப்பான் தற்போது எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலைமையைச் சரிசெய்ய, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஐசிடி ஆகியவற்றைப் பயன்படுத்தி புதிய முறையில் குழாய்களைப் பதித்தலை Kubota எதிர் நோக்குகிறது. சைட் வேகன் அறிமுகமே அத்தகைய தொழில்நுட்பமாகும்.
 • நிறுவுதல் நிபுணத்துவம்
  வளைதன்மையுடைய பைப்புகளைப் பொருத்தும் அனுபவத்தின் நீண்ட வரலாற்றில், பைப்பிற்குள்-பைப்பை பொருத்துதல், DXR முறை மற்றும் வெல் கேஸிங் முறை போன்ற பல்வேறு நிறுவுதல் நிபுணத்துவத்தை Kubota பெற்றுள்ளது. எங்களது பொருத்துதல் முறை, சாலைப் போக்குவரத்து மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு குறைவான பாதிப்பு, குறைந்தளவு அபாயம், குறுகிய கட்டுமானக் காலம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
  குழாய்க்குள் குழாய் பொருத்துதல் முறை
உங்களது ஊரில் இந்தத் தயாரிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு:

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop