எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
(Johkasou)

1962 முதல், கிடைக்கப்பெறும் தனது அனைத்துத் தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உகந்த நீர் சுத்திகரிப்புத் தீர்வை வழங்க Kubota தானே உறுதிகொண்டு வருகிறது. கழிவுநீர் உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் அமைக்க முடிகின்ற கழிவுநீர் சுத்திகரிப்பு டேங்குகள் (Johkasou), வீட்டு மற்றும் தொழிற்சாலைக் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கும், நீர் சூழ்நிலையைப் பாதுகாப்பதற்கும் உதவுகின்றன. Kubota, பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்குகிறது, நவீன மற்றும் நிலையான சுத்திகரிப்புத்திறன் பெற்ற அதன் தனியுரிமை மெம்பரேன் பிரிப்பு அமைப்புகள் மற்றும் தேவையான சுத்திகரிப்பு அளவுகள், பயன்பாடுகள் மற்றும் நோக்கங்களைப் பூர்த்தி செய்வதற்கான காம்பாக்ட் மூவிங் பெட் அமைப்புகள் உட்பட.
இன்று, ஜப்பானில் தனித்தன்மையுடன் தயாரிக்கப்படும் Johkasou டேங்குகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. ஆசியாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு நிறுவப்படாத பல இடங்கள் உள்ளன; இது வீணாகும் நீர் சுத்திகரிக்கப்படாமல் இருப்பதால், ஆறுகள் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் மாசடைய வழிவகுத்துள்ளது. தனது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைத் தொழிலின் ஒரு பகுதியாக, Johkasou டேங்குகள் பேக்கேஜ் தீர்வுகளின் விற்பனையை Kubota ஊக்குவித்துள்ளது. வரிசையான கழிவுநீர் சுத்திகரிப்பு செயல்முறைக்குள் உருவாக்கப்பட்டுள்ள அதன் நவீன நீர் சுத்திகரிப்பு நிபுணத்துவத்தை முன்வைக்கிறார்கள். Johkasou டேங்குகளை குறுகிய காலத்தில் அமைத்து, மிகச்சிறந்த நீர் சுத்திகரிப்பு செயல்திறனை வழங்க இயலும், இது தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுப் பகுதிகள், குறிப்பாக குறைந்த மக்கள்தொகை உள்ள பகுதிகளுக்கு, மிகத் திறனுடைய தீர்வுகளை வழங்குகிறது. மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு டேங்குகளுக்கு (Johkasou) ஏற்கனவே வியட்நாமில் அதிகரித்துவரும் ஆணைகளுடன், சீனா மற்றும் மியான்மர் உட்பட ஆசியாவின் பிற நாடுகள் மற்றும் பகுதிகளிலும் Kubota இந்த டேங்குகளை பிரபலப்படுத்தி வருகிறது.

 • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

அம்சங்கள்

மிகவும் நவீன நீர் சுத்திகரிப்புக்கான மெம்பரேன் பயோரியாக்டர் அமைப்பு

Kubota-வின் கழிவுநீர் சுத்திகரிப்பு டேங்குகள், கழிவுநீர் அமைப்புகள் அரிதாக நிறுவப்பட்டுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, இதைச் செய்வது Kubotaவின் தனியுரிமை மெம்பரேன் பயோரியாக்டர் அமைப்பு, இதில் மிகவும்-செறிவுமிக்க ஆக்டிவேட்டட் ஸ்லட்ஜ் அமைப்பு, நீரில் மூழ்கியுள்ள நுண்ணிய துளையுடைய மெம்பரேன்களுடன் இணைந்து நவீன நீர் சுத்திகரிப்புச் செயலை மேற்கொள்கிறது. சுத்திகரிக்கப்பட்ட நீரை மீண்டும் சுத்தப்படுத்தாமல், கழிவறைப் பயன்பாட்டிலும், நீர் தெளிக்கவும் பயன்படுத்தலாம்.

கச்சிதமான அளவு

நமது நவீன அமைப்பு இயக்கம், ஏரேஷன் டேங்கின் அளவைக் குறைக்க இயலச் செய்துள்ளது. மேலும், செட்லிங் டேங்க் மற்றும் ஸ்லட்ஜ் திக்கனர் ஆகியவை தேவைப்படாது, இதன் காரணமாக டேங்கின் அளவு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்தது மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையானது, இதன் காரணமாகக் கட்டுமானச் செலவுகள் குறைகிறது.

பிளாண்ட் பேக்கேஜ்

Kubota தனது நவீன நீர் சுத்திகரிப்பு நிபுணத்துவத்தை உள்ளமைத்து பிளாண்ட் பேக்கேஜை வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான இடங்களிலும், தேவையான அளவுகளிலும் சுத்திகரிப்புத் தீர்வுகள் கிடைக்கப் பெறுகின்றன. அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, கழிவுநீர் சுத்திகரிப்பு டேங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வரிசை

கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் நீரோட்ட வீதம் 1.0 முதல் 5.1க்கும் மேல் உள்ளன.

 • KJ
 • KZ
 • HCZ
 • KM-SG-NP
 • K-HC-T
 • K-HC-R

எங்கள் தொழில்நுட்பங்கள்

 • மெம்பரேன் பிரிப்பு முறை: KUBOTA Submerged Membrane Unit™
  KUBOTA Submerged Membrane Unit™, பாலியோலெஃபினில் தயாரிக்கப்பட்ட நுண்துளை மெம்பரேன்களை உள்ளடக்குகிறது. மெம்பரேன்களின் நுண்துளைகளை விடச் சிறிய திரவங்கள் மெம்பரேனை ஊடுருவிச் செல்ல முடியும் என்றாலும், மாசடைந்த உட்பொருட்கள் அதன் பெரிய அளவின் காரணமாக ஊடுருவிச் செல்ல இயலாது. மேலும், மாசுகள் மெம்பரேனின் மேற்பரப்புக்கு இழுக்கப்படுகின்றன. காற்றோட்டம் காரணமாக உருவான நீரோட்டம் மற்றும் நீர்க்குமிழிகள் மெம்பரேனின் மேற்பரப்புடன் தொடர்புக்கு வரும், அதன்பிறகு அது மேற்பரப்பை அதிரச் செய்துகொண்டே மேல் நோக்கிவரும். இது மெம்பரேனின் மேற்பரப்பை எப்பொழுதும் சுத்தமாக வைத்து, நுண்துளைகள் அடைத்துக்கொள்ளாமல் தடுக்கிறது.
 • மீடியா ஃப்ளோ ஃபில்டர் முறை
  நகரும் படுக்கை டேங்க், நுண்ணுயிர்களைத் தக்கவைக்க உயர்திறனுடைய காலியான உருளைவடிவ மீடியா ஒன்றைக் கொண்டுள்ளது.

பயன்பாடு

ஆலைக் கழிவுநீருக்கு

மருத்துவமனைக் கழிவுநீருக்கு

தனிப்பட்ட வீட்டுக் கழிவுநீருக்கு

நீர் மறுசுழற்சிக்கு

உங்களது ஊரில் இந்தத் தயாரிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு:

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop