எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

மூலப்பொருட்கள்

அதன் உண்மையான மற்றும் முக்கியத் தொழிலான வார்ப்பு உலோகப் பொருட்களுடன், பல்வேறு வார்ப்பு முறைகளைப் பயன்படுத்தி வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான மூலப்பொருட்களை Kubota வழங்குகிறது. மையவிலக்கு வார்ப்புத் தொழில்நுட்பத்தில் தோன்றி, கட்டுமானப் பொருட்கள் போன்ற மதிப்புக் கூட்டு பொருட்களின் பரந்த வரிசையை Kubota பெற்றுள்ளது மற்றும் சமூக உள்கட்டமைப்பின் அடிப்படையை உருவாக்குவதற்குப் பங்களிக்கிறது.
Kubota-வின் தயாரிப்புகள், பிளாஸ்டிக் தயாரிப்புக்கு முதன்மையான மூலப்பொருளான எத்திலின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பைரோலிட்டிக் உலைகளுக்கான வெடிக்கும் காயில்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அமோனியா (உரம்) உற்பத்தி ஆலைகளில் ஹைட்ரஜன் உற்பத்திக்கான ரெஃபார்மர் குழாய்களை உள்ளடக்குகிறது. தற்போது, உலகெங்கிலும் விநியோகிக்கப்படுவதற்காக ஜப்பான், கனடா, சவுதி அரேபியா மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும் கிராக்கிங் காயில்களுக்கான தேவை அதிகரித்துவருகிறது. Kubota, மிகுந்த வெப்ப எதிர்ப்புக் கலவை மற்றும் ரோலிங் மில் சுருள்கள் போன்ற இரும்பு தொடர்பான பொருட்கள் முதல், காகிதத் தொழிற்சாலைகளுக்கான சக்சன் ரோல் ஷெல்கள் போன்ற இரும்பு அல்லாத உலோகப் பொருட்கள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகள் மூலம் சமுதாயத்துக்குப் பங்களிக்கிறது.
மேலும், இது TXAX (ஆட்டோமொபைல் பிரேக் பெடல் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் டைட்டனேட் ஃபைபர்), செராமிக்ஸ் மற்றும் பிற கலப்பு பொருட்கள் போன்ற நவீன மூலப்பொருட்களை நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தும் உள்ளது.
Kubota-வின் மூலப்பொருட்களின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், பெரும்பாலான மூலப்பொருட்கள் வாடிக்கையாளர்களின் தேவைகள் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. எங்களது நீண்ட அனுபவமும், நிபுணத்துவமும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நெகிழ்வுத்தன்மையை இயலச் செய்கிறது. சமூகத்தின் பல்வேறு வகையான மற்றும் சிக்கலான தேவைகளை எதிர்கொள்ளும் எப்பொழுதும் இல்லாத மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்க Kubota தொடர்ந்து உறுதி கொண்டிருக்கிறது.

 • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

வரிசை

 • ரோலிங்-மில் ரோல்
 • கிராக்கிங் காயில்
 • TXAX
 • பிளாஸ்டிக் இஞ்ஜெக்‌ஷன் & எக்ஸ்ட்ரூஷன் மெஷினரிக்கான பாகங்கள்
 • டிரைனேஜ் மேனிஃபோல்டுகள்

எங்கள் தொழில்நுட்பங்கள்

 • மையவிலக்கு வார்ப்பு
  இடைவெளி இல்லாத பைப்புகள் மற்றும் உருளை வடிவத்தைத் தயாரிக்க உகந்த செயல்முறை மையவிலக்கு வார்ப்பு ஆகும். குழம்பு நிலையில் உள்ள உலோகத்தை, உயர் வேகத்தில் சுழலும் வார்ப்புக்குள் நுழைப்பதன் மூலம், உறுதியான உலோகமானது அதிக அழுத்தத்தின் கீழ் மையவிலக்கு விசை காரணமாக உருளை வடிவ திடப்பொருளாக மாறும்.
 • MERT (மிக்ஸிங் எலெமெண்ட் ரேடியண்ட் டியூப்)
  MERT என்பது அசல் Kubota புதிய வகை கிராக்கிங் டியூப் ஆகும், இது உள்ளேயுள்ள மையவிலக்கு மூலம் வார்க்கும் குழல் மீது தனிமத்தைக் கலப்பது மூலம் கலவை விளைவைக் கொண்டிருக்கிறது. இந்தக் கலவை விளைவால், சிறப்பான வெப்ப மாற்றம் மற்றும் குழலில் உள்ள திரவத்தின் ஒருபடித்தான வெப்பப்படுத்தல் ஆகிய இரண்டையும் அடைய இயலும்.
 • TXAX (பிரேக் பேடு மூலப்பொருள்)
  இந்த பொட்டாசியம் டைட்டனேட் பவுடரானது பிரேக் பேடுகளுக்கான மூலப்பொருளாகப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கல்நார் அட்டைக்கான மாற்றுப் பொருளில் தேவையான மிக உயர்ந்த உராய்வுப் பண்புகளையும், தேய்த்தல் மற்றும் வெப்பத்துக்கு எதிர்ப்பையும் கொண்டுள்ளது. ஒரு மூலப் பொருளாக இதன் பாதுகாப்புத்தன்மை பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இது உலகம் முழுவதும் நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும், இந்தத் தயாரிப்புக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உங்களது ஊரில் இந்தத் தயாரிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு:

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop