எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

பம்புகள்

1952-இல் தனது முழு அளவிலான பம்பு தொழிலைத் தொடங்கியது முதல், Kubota; நீர் வழங்கல், கழிவு நீர், மழை நீர் வடிகால், மின்சார உற்பத்தி மற்றும் இரும்பு உற்பத்தி ஆகியவற்றுக்காக குழாய்களை உருவாக்கித் தயாரித்து வருகிறது.
Kubota-வின் பம்புகள், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவி நமது வாழ்வுகளில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. நீர் சுத்திகரிப்பு ஆலை போன்று மேல்நிலையிலிருந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை போன்று கீழ்நிலை வரை அவை முக்கியப் பங்காற்றுகின்றன. பம்புகளை ஒரு தயாரிப்பாக உருவாக்குவது மட்டுமல்லாமல், ISO9001 சான்றளிக்கப்பட்ட Kubota, தனது பொதுவான பொறியியல் திறன்களை சாதகமாகக் கொண்டு பம்பு தொழிற்சாலைகளையும் அமைத்துள்ளது.
தென்கிழக்கு ஆசியா/மத்திய கிழக்கு உட்பட ஜப்பானுக்கு உள்ளும், வெளியிலும் Kubota தனது பம்பு தொழிலை வளர்த்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில், விரைவாக வளர்ந்து வரும் உள்கட்டமைப்புக்கான தேவைகளுக்கு இடையில், தனது தயாரிப்புகளை நிலையாக வழங்குவதற்காக சீனாவிலுள்ள தனது உற்பத்தி மையங்களை அது முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறது. இதற்கிடையில், மத்திய/அருகிலுள்ள கிழக்கில், கடல் நீரை உள்ளெடுக்கும் பம்புகள் முதல், நீண்ட தூர நீர் மாற்றக் பம்புகள் மற்றும் தலைகீழ் சவ்வூடு பரவுதலுக்கான (RO) உயர் அழுத்தக் பம்புகள் வரை, கடல் நீர் உப்பு அகற்றல் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கான அனைத்துவகைப் பம்புகளையும் Kubota வழங்குகிறது.
இன்று, தயாரிப்புகளை வழங்குவதுடன் கூடுதலாக, பம்புகளின் பராமரிப்பு போன்ற தனது விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை மேலும் மேம்படுத்த Kubota முனைகிறது.

 • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

அம்சங்கள்

உயர்ந்த தரம், உயர்ந்த செயல்திறன்

எங்களது பம்புகளின் உயர்ந்த தரம் மற்றும் உயர்ந்த செயல்திறன் ஆகியவை ஒவ்வொரு தயாரிப்பும் பல்வேறு பகுத்தாய்தல்கள் மற்றும் சோதனைக்கு உட்படும் பகுப்பாய்வில் Kubota-வின் வலிமையின் விளைவே ஆகும். அத்தகைய பகுப்பாய்வுகள் கட்டமைப்புப் பகுப்பாய்வு முதல் அதிர்வுப் பகுப்பாய்வு, திரவப் பகுப்பாய்வு, நீர் சுத்தியல் பகுப்பாய்வு மற்றும் இரைச்சல் பகுப்பாய்வு வரை அமையும்.
பகுப்பாய்வில் நமது சிறப்பிற்கான ஒரு உதாரணம், அதிர்வுப் பகுப்பாய்வை மேற்கொண்டும், கட்டுமானப் பகுப்பாய்வை நடத்தியும், ஒத்ததிர்வு நிகழ்வுக்கான அபாயத்தை சமாளித்து ஜோர்டானில் உள்ள சாக்கடல் (Dead Sea) உள்ளெடுக்கும் பம்புக்கு குறைந்த அதிர்வு பம்பினை வழங்குவதில் உள்ள நமது அனுபவம் ஆகும்.

எளிதான நிறுவுதல் மற்றும் பராமரிப்பு

Kubota-வின் பம்புகளின் பண்புகளில் ஒன்று, எளிதான நிறுவுதல் மற்றும் பராமரிப்பு ஆகும். வெர்டிக்கல் மிக்ஸ்டு ஃப்ளோ பம்புகள், வெர்டிக்கல் ஷாப்ட் வால்யூட் வகை மிக்ஸ்டு ஃப்ளோ பம்புகள் ஆகியவை எடை குறைவானவை மற்றும் கையாள எளிதானவை. மேலும் நமது பம்புகள் கடினமற்ற அல்லது எளிதான பராமரிப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்களது தயாரிப்புகளில் பெரும்பாலானவை மாற்றத்தக்க பாகங்களைக் கொண்டிருக்கும், அவை மாற்றுவதற்கு எளிதானவை, அல்லது சிறிய அளவிலான மாற்றங்களே தேவைப்படுபவை, இது குறைந்த பராமரிப்பு நேரத்துக்கு வழிவகுக்கும்.

உலகளாவிய ஆதரவு தொடரமைப்பு

எங்களது தொடரமைப்பு, உலகம் முழுவது பரவியுள்ளது, எனவே எங்களது வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகள் தொடர்பாக எந்த நேரத்தில் எங்கள் உதவி தேவைப்பட்டாலும் அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். உங்களது பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வைக் கண்டறிய எங்கள் பொறியாளர்களின் குழு தயாராக இருக்கும்.

வரிசை

வெவ்வேறு பயன்பாடுகளுக்கு பரந்த அளவிலான உயர்தர பம்புகளை Kubota வழங்குகிறது.

 • வெர்டிக்கல் மிக்ஸ்டு ஃப்ளோ பம்ப்
 • டபுள் சக்‌ஷன் வால்யூட் பம்ப்
 • உப்பு அகற்றல் சாதனங்கள்
 • வெர்டிக்கல் ஷாப்ட் வால்யூட் வகை மிக்ஸ்டு ஃப்ளோ பம்ப்
 • நீர்மூழ்கி பம்ப்
 • ஹாண்டி மொபைல் பம்ப் பேக்கேஜ்

எங்கள் தொழில்நுட்பங்கள்

 • அழிவுகளுக்கான தனித்தன்மையான தீர்வு
  எங்களது பம்புகள் அவசரகால சூழலில் உதவிகரமாக இருப்பதாக Kubota நம்புகிறது; எனவே அதன் வகையில் உலகிலேயே முதலாவதான, சுயமாகத் தக்கவைக்கும், அதிகம் நகரும் ட்ரெயின் பம்பு வாகனத்தை உருவாக்க, Kubota ஒருபடி மேலே சென்று ஹாண்டி பம்புடன் தனிப்பட்ட பவர் ஜெனரேட்டரை இணைத்தது.
  இது 2011ல் மிகப்பெரிய கிழக்கு ஜப்பான் பூகம்பத்தின் போதும், தாய்லாந்தில் அழிவை ஏற்படுத்திய வெள்ளத்தின்போதும், அதன் பின்னர் அதுபோல் நிகழ்ந்த மற்ற அவசரகால சூழ்நிலைகளின் போதும் மிகச்சிறந்த செயல்திறனை வழங்கியது.
 • உப்பு அகற்றலுக்கான எங்களது சமீபத்திய பம்பு
  Kubota, RO உப்பு அகற்றல் ஆலைக்கான அனைத்து பம்புகள் மற்றும் ஆற்றல் மீட்பு அமைப்புகளையும் கொண்டுள்ளது. எங்களது நீண்ட அனுபவத்தின் அடிப்படையிலான மிக முன்னேறிய தொழில்நுட்பம், எங்களது சமீபத்திய உயர் அழுத்தக் குழாயில் பயன்படுத்தப்பட்டது.
  இதன் உயர் செயல்திறன் இயக்கச் செலவு குறையக் காரணமாக உள்ளது. இது எளிதான கச்சிதமான வடிவமைப்பு மற்றும் அதிக உறுதி/நம்பகத்தன்மையுடன் கூடிய நீண்ட மற்றும் நிலையான இயக்கத்தைக் கொண்டுள்ளது, மேலும் இது பராமரிக்க எளிதானது, இதன் காரணமாக ஆயுள் முழுவதும் குறைவான செலவே ஏற்படுகிறது. அனைத்து அமைப்புகளின் மேம்பட்ட உயர் செயல்திறனை அனைத்துச் சாதனங்களையும் ஒட்டுமொத்தமாக ஒரே அலகாகப் பொருத்துவது மூலம் அடைய முடியும்.

பயன்பாடு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

சுத்திகரிப்பு ஆலை

தொழிற்சாலை நீர் வழங்கல்

பவர் பிளாண்ட்

பேரிடர்-நிவாரணம் (Flood Control)

உங்களது ஊரில் இந்தத் தயாரிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு:

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop