எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

டிராக்டர்

Kubota, 1960-இல் தனது பண்ணை டிராக்டர்களை முதலில் அறிமுகப்படுத்தியது முதல், “மேட்-இன்–ஜப்பான்” டிராக்டர்கள் சந்தையில் எப்பொழுதும் முன்னணியில் இருந்து வருகிறது. இன்று, பலதரப்பட்ட பயன்பாடுகள் மற்றும் அளவுகளுக்காக சிறியது முதல் பெரிய அளவு டிராக்டர்கள் வரை முழுமையான தயாரிப்புத் தெரிவுகளை Kubota வழங்குகிறது. மேலும், Kubota-வின் டிராக்டரில் பொருத்தப்படும் சாதனங்கள் உழுதல், சமப்படுத்தல் மற்றும் பல பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. Kubota-வின் உயர் திறன்மிக்க செயல்பாடு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை உலகம் முழுவதும் இந்நிறுவனத்துக்கு உறுதியான நற்பெயரை நிலைநாட்ட உதவியுள்ளது. இப்பொழுது, பெரிய டிராக்டர்களை அறிமுகப்படுத்த நாங்கள் திட்டமிட்டு வருகிறோம், இது பெரிய அளவில் வணிக ரீதியிலான விவசாயத்துக்கான M7 வரிசை டிராக்டர்களில் தொடங்கும். பெரிய அளவில் வணிக ரீதியிலான விவசாயத்துக்கு புதிய எல்லைகளை நிர்ணயிக்கும் அதே சமயம், உள்ளூர் தேவைகளுக்குக் கவனமாகச் செவிமடுத்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தனது அர்ப்பணிப்பை Kubota தொடர்ந்து தக்கவைக்கும். விவசாயத் துறையை முன்னேற்றுவதையும், அதிகாரமளிப்பதையும் Kubota தொடரும்.

 • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

அம்சங்கள்

Kubota டீசல் என்ஜின்

Kubota ஒவ்வொரு நாட்டின் கடுமையான வெளியீட்டுக் கட்டுப்பாடுகளுக்கு விரைவாகப் பதில்வினை புரிந்து, அதற்குரிய சுற்றுச்சூழல் தரங்களைப் பூர்த்தி செய்யும் தூய்மையான மற்றும் ஆற்றல்மிக்க என்ஜின்களை வழங்குகிறது. எங்களது தனித்தன்மை வாய்ந்த E-CDIS மூலம் சாத்தியமான அதிக எரிபொருள் சிக்கனத்துக்கும் கூடுதலாக, பொது ரெயில் அமைப்புகளில் குறைந்த அதிர்வு, குறைந்த இரைச்சல் மற்றும் அதிகப் பலனை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்களது டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட எங்களது டிராக்டர்கள் யாவும் நிலையான மற்றும் சக்திமிக்க செயல்திறனை வழங்குகிறது.

செயல்திறனுக்கு ஏற்றது

Kubota முக்கியப் பாகங்களை வடிவமைத்துத் தயாரித்த காரணத்தால், ஒவ்வொரு பாகமும் அதிகபட்ச செயல்திறனுடன் செயலாற்றுகிறது, இது தயாரிப்பின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது.

உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் தயாரிப்பு மேம்பாடு

டிராக்டர்களுக்கான தேவைகள் ஒவ்வொரு சந்தையிலும் வேறுபடுகின்றன. ஐரோப்பியச் சந்தைகளில் அவை பண்ணைசார் வேலைகளில் பயன்படுத்தப்படுகின்றன, ஜப்பான் போன்ற நாடுகளில் அவை நெல் வயல்களில் பயன்படுத்தப்படுகின்றன. உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் தயாரிப்புகளை உருவாக்குவதற்காக Kubota உலகெங்கிலும் மிகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வரிசை

Kubota டிராக்டர்களின் முழுமையான ஒரு வரிசையை வழங்குகிறது. உட்புற, விவசாய மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் நமது காம்பாக்ட் யுடிலிடி டிராக்டர்கள், ஆற்றல், செயல்திறன் மற்றும் சிறிய உருவம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகினறன. எங்களது விவசாய டிராக்டர்கள், பண்ணைகளில் தேவைப்படும் கடினமான பணிகளைக் கையாள இயலும் அதே சமயம், காம்பாக்ட் டிராக்டர்களின் செயல்திறன் மற்றும் இயங்குதன்மையைக் கொண்டிருக்கிறது.

 • BX வரிசை
 • B வரிசை
 • L வரிசை
 • M வரிசை

எங்கள் தொழில்நுட்பங்கள்

 • பல்வேறு ட்ரான்ஸ்மிஷன்கள்
  பரந்த அளவிலான குதிரைசக்தியுடன் பலவகை ட்ரான்ஸ்மிஷன்களை நாங்கள் கொண்டுள்ளோம், அவற்றில் உள்ளடங்குபவை: மெக்கானிகல் ட்ரான்ஸ்மிஷன், HST (ஹைட்ரோ ஸ்டாடிக் ட்ரான்ஸ்மிஷன்) , GST (கிளைடு ஷிப்ட் ட்ரான்ஸ்மிஷன்), பவர் ஷிஃப்ட் ட்ரான்ஸ்மிஷன், CVT (தொடர்ச்சியான வேரியபிள் ட்ரான்ஸ்மிஷன்) மற்றும் பிற.
 • பை-ஸ்பீடு டர்ன்
  முன்சக்கரங்களின் திருப்புதல் கோணம் தோராயமாக 35°க்கும் அதிகமாகும்போது, Kubota-வின் பை-ஸ்பீடு டர்ன் முன்சக்கரங்களை பின்சக்கரங்களைவிட கிட்டத்தட்ட இருமடங்கு வேகத்தில் சுழலச் செய்கிறது. இதன் காரணமாக சீராக, நெருக்கமாகத் திரும்ப முடிந்து அருகிலுள்ள வரிசைக்குள் முதல் முயற்சியிலேயே திரும்பவும், கால் நடைக் கொட்டகைகள் மற்றும் கட்டிடங்களில் எளிதாகத் திரும்பவும் வழிவகுக்கிறது.
 • ஆட்டோமேட்டிக் ஹரிஸாண்டல் கண்ட்ரோல் சிஸ்டம்
  டிராக்டரின் சாய்வுநிலை மாறினால் அல்லது வாகனம் நிலையில்லாமல் இருக்கும்போது கூட, டிராக்டர் எப்பொழுதும் தானே சமநிலைக்கு வருகிறது, அது மிகவும் ஈரப்பதம் உடைய மென்மையான நிலப்பரப்பாக இருந்தாலும் சரி அல்லது மேடுபள்ளமான பயிரிடப்பட்ட பூமியாக இருந்தாலும் சரி. இவ்வாறு, கள நிலைமைகளால் பாதிக்கப்படாமல் துல்லியமாகப் பணியாற்ற இது உங்களை அனுமதிக்கிறது.
 • பணிச்சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட கேப்
  Kubota டிராக்டரின் நவீன முன்னேறிய கேபின் மேம்பட்ட வசதிக்காக வடிவமைக்கப்பட்டது. ஆடியோ மற்றும் ஏர் கண்டிஷனிங் உட்பட அனைத்து டிஸ்பிளேக்கள், லிவர்கள் மற்றும் கண்ட்ரோல்கள் ஆகியவை எளிதாக அணுகத்தக்க வகையிலும், எளிதாக இயக்கத்தக்க வகையிலும் வலது-கை கான்சோல் மீது அமைந்துள்ளன.
 • நுட்பமான விவசாயத்துக்கான KSAS
  திறனை மேம்படுத்தவும், விவசாயப் பயிர்களுக்கு அதிக மதிப்பைக் கூட்டவும், Kubota நிறுவனம் Kubota ஸ்மார்ட் அக்ரிகல்ச்சுரல் சிஸ்டம்(KSAS) என்பதை உருவாக்கியுள்ளது. வயல்களில் தகவல்தொடர்பு தொழில் நுட்பத்தை (ICT) பயன்படுத்துவது மூலம் நுட்பமான விவசாயத்தை ஆராய்ச்சி செய்வதையும், ஊக்கப்படுத்துவதையும் நாங்கள் தொடர்வோம்.
 • Kverneland கருவிகளுடன் இணைந்த கூடுதல் வாய்ப்புகள்
  2012-இல் நமது முழுஉரிமையான துணை நிறுவனம் ஆன குழுமத்தின் பலங்களை அதிகரித்து, பெரிய அளவு விவசாயத்துக்கான புதிய டிராக்டர் கருவிகளை Kubota உருவாக்கி வருகிறது. இவ்வாறு அதிக வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதற்காக Kubota டிராக்டர்கள் அவற்றின் பயன்பாடுகளை விரிவாக்கி வருகின்றன.

பயன்பாடு

Kubota டிராக்டர்கள் பன்முகத் திறனுடன் செயல்திறனை வழங்குகின்றன.

நெல்வயல்

உயர்நில களம்

பழத்தோட்டம்

பண்ணைமனை

தோட்டம்

உங்களது ஊரில் இந்தத் தயாரிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு:

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop