எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

பயன்பாட்டு வாகனம்

Kubota-வின் பயன்பாட்டு வாகனங்களால், கரடுமுரடான நிலப்பரப்புகளிலும் எளிதாகப் பயணிக்க இயலும். பண்ணைகள், தொழிற்சாலைகள், பூங்காக்கள் போன்ற பல்வேறு இடங்களில் மக்களை ஏற்றிச்செல்லவும், பொருட்களை ஏற்றிச் செல்லவும் இவை பயன்படுகின்றன. அற்புதமான செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றுக்காக வாடிக்கையாளர்களால் மிக உயர்வாக மதிப்பிடப்பட்டுள்ள எங்களது பயன்பாட்டு வாகனங்களில், வருங்காலத்தில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

 • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

அம்சங்கள்

உழைப்பாளி

Kubota எனும் நாங்கள் உறுதியான டிராக்டர்களைத் தயாரிப்பதற்காக உலகம் முழுவதும் பலவருடங்களாக நற்பெயரை நிலைக்கச் செய்துள்ளோம். எங்களது பலவருட அனுபவம் மூலம் உருவாக்கப்பட்ட உற்பத்தித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாங்கள் உறுதியான UV-ஐ உருவாக்கியுள்ளோம், அது பல்வேறு வகையான அன்றாடப் பணிகளுக்கு நம்பகமான ‘உழைப்பாளி’ஆகப் பணியாற்றுகிறது.

செயல்திறனுக்கு ஏற்றது

Kubota, முக்கியப் பாகங்களை வடிவமைத்துத் தயாரித்த காரணத்தால், ஒவ்வொரு பாகமும் அதிகபட்ச செயல்திறனுடன் செயலாற்றுகிறது, இது தயாரிப்பின் ஒட்டுமொத்தத் தரத்தை மேம்படுத்துகிறது.

வரிசை

டீசல் முதல் கேஸ் என்ஜின் வரையிலும், இரண்டு பயணிகள் முதல் நான்கு பயணிகளுக்கான வாகனங்கள் மற்றும் வெவ்வேறு மாடல் வண்டிகளை உள்ளிட்ட பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் நாங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பதிலளிக்கிறோம்.

 • RTV-X900
 • RTV-X1120D
 • RTV-X1100CR

எங்கள் தொழில்நுட்பங்கள்

 • Kubota டீசல் என்ஜின்
  எங்களது உயர் செயல்திறன்மிக்க என்ஜின்கள் பொருத்தப்பட்டு, Kubota வாகனங்கள் திருப்திகரமான ஆற்றல்மிக்க செயல்திறனை வழங்குகிறது, இவை விவசாயப் பயிர்களை எடுத்துச் செல்வது முதல் கட்டுமானப் பொருட்களை இடமாற்றம் செய்வது வரை எந்தவொரு பணியையும் நிறைவேற்றும் திறனுடையதாக உள்ளன.
 • VHT குறிக்கோள்
  Kubota-வின் நவீன VHT-X (Variable Hydraulic Transmission) , பரந்த டார்க் பேண்ட் மற்றும் மிகப்பெரிய ஆயில் கூலர்களை வழங்குகின்றன, இவை செயல்திறனையும், உறுதியையும் அதிகரிக்கும்.
 • டைனமிக் பிரேக்கிங்
  டைனமிக் பிரேக்கிங்கானது, மேம்பட்ட பிரேக்கிங் ஆற்றல் மற்றும் அதிகமான டிரைவிங் கண்ட்ரோல் ஆகியவற்றை வழங்குகிறது.
 • IRS வழங்கும் வசதி
  எல்லா நான்கு சக்கரங்களிலும் உள்ள தனிப்பட்ட சஸ்பென்ஷன், நிலப்பரப்பு அல்லது லோடை கருத்தில்கொள்ளாமல், உண்மையில் மிகச்சிறந்த பயணத்தை உறுதிப்படுத்துகிறது. Kubota-வின் எக்ஸ்ட்ரா டியூட்டி IRS (தனிப்பட்ட பின்பக்க சஸ்பென்ஷன்) தொழில்நுட்பம் உறுதிக்கு புதிய தரத்தை நிர்ணயிக்கிறது.
 • பிரத்தியேகமான மூடப்பட்ட கேப்
  மூடப்பட்ட கேபின் இருப்பதால், காலநிலை அல்லது வெப்பநிலை ஆகியவை குறித்த கவலையின்றி, பயனாளர்கள் எந்தச் சூழ்நிலையிலும் சௌகரியமாக சாதனத்தை இயக்க முடியும்.
 • பயனுள்ள அம்சங்களுக்கு ஆதரவளிக்கு மிகச்சிறந்த ஹைட்ராலிக்ஸ்
  ஒரு ஒற்றை லிவரை சுண்டிவிடுவது மூலம், ஹைட்ராலிக் லிஃப்ட் கார்கோ பாக்ஸ் மேலெழும்புகிறது மற்றும் உங்களது கார்கோ சறுக்கிக்கொண்டு வெளியே வருகிறது. நுட்பமாகச் செயல்படும் ஹைட்ரோஸ்டாடிக் பவர் ஸ்டியரிங், எந்தவொரு நிலப்பரப்பையும் உங்கள் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்குகிறது. ஸ்டியரிங் வீல் சரிவாக சரிசெய்யத்தக்கது, இது உங்களது ஓட்டும் நிலைக்கேற்ற உகந்த கோணத்தை அமைக்க உங்களுக்கு வழிவகுக்கிறது.

பயன்பாடு

எங்களது உறுதியான பயன்பாட்டு வாகனங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படக்கூடியதாக உள்ளது.

பண்ணைப் பணி

கட்டுமானத் தளம்

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop