எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

சுற்றுச்சூழல் சாதனங்கள்
& தொழிற்சாலை பொறியியல்

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, நீர் தொடர்பான தொழிலில் Kubota ஈடுபட்டுவருகிறது, மேலும் உலகெங்கிலும் நீர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பங்காற்றி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உலகம் முழுவதும் விரிவுபடுத்த வீட்டிலிருந்து வரும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலையில் வீணாகும் கழிவுநீரை முறையாகச் சுத்திகரித்து, இயற்கை மீதான அவற்றின் பாதிப்பைக் குறைக்க வேண்டியுள்ளது அல்லது நீர் பற்றாக்குறைப் பிரச்சினைகளைக் குறைக்க அவற்றை மறுஉபயோகம் செய்ய வேண்டியுள்ளது. 
Kubota-வால், ஒரு வாடிக்கையாளரின் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான உபகரணம் மற்றும் பொறியியல் திறன்களை வழங்கி, விரிவான நீர் தீர்வுகளை வழங்க இயலும். மெம்பரேன் தீர்வுகளில் நமது நிபுணத்துவம், நம்மால் தயாரிக்க இயலும் பல்வகைப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலைப் பொறியியலில் நமது மிகப்பெரிய அனுபவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, நீர் சுத்திகரிப்பு முதல், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் வீணாகும் நீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் அதிகரித்துவரும் பல்வகை நீர் சுத்திகரிப்பு அமைப்புகளின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்.
இன்று, நமது நிபுணத்துவத்தை ஜப்பானுக்கு வெளியே காட்டிவருகிறோம், குறிப்பாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் விரைவாக வளர்வதை நாங்கள் காணும் தென்கிழக்கு ஆசியாவில். Kubota தனது நிபுணத்துவத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி, உலகெங்கிலும் நீர் பிரச்சினைகளில் முன்னேற்றத்தைச் சாத்தியமாக்க தனது உதவியை அதிகரிக்கும்.

  • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

அம்சங்கள்

மேல்நிலையிலிருந்து கீழ்நிலைவரை

Kubota நீர் சுத்திகரிப்பு அமைப்பு, தொழிற்சாலை தண்ணீருக்கான சுத்திகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு வடிகால் அமைப்பு போன்ற பல தனியுரிமை நீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பங்களை வழங்குகிறது. Kubota நம்பகமான தயாரிப்புகள் மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு, நீர் வளங்கள் அமைப்பில் மேல்நிலை முதல் கீழ்நிலை வரை கவனிக்கிறது. இந்தப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கும் உலகிலுள்ள மிகச்சில நிறுவனங்களில் நாங்கள் ஒன்று.

நீர் நிபுணர், EPC முதல் பராமரிப்பு வரை

Kubota நீர் தொடர்பான தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் நீண்ட மற்றும் கணக்கற்ற அனுபவங்களைக் கொண்டுள்ளது. பைப்புகள், பம்புகள் மற்றும் மெம்பரேன் தீர்வுகளின் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல், நாங்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அனுபவத்தைப் பெற்றுள்ள ஒரு பொறியியல் நிறுவனமும் ஆகும். எங்கள் திறன்கள் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) பணியிலிருந்து நீர் தொடர்பானவற்றில் நிபுணராக விரிகின்றது, இதில் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைத் தீர்க்க எங்களது நிபுணத்துவம் முழுமையாகச் சாதகமாக இருக்கிறது.

எங்கள் தொழில்நுட்பங்கள்

  • டேங்க்- நீர்மூழ்கி வகை செராமிக் வடிகட்டு அமைப்பு
    இந்த அமைப்பு, உறுதியான மற்றும் இரசாயனத்தை எதிர்த்து நிற்கும் செரமிக் மெம்பரேனை கைக்கொள்கிறது. எனவே, இதன் ஆயுள் கரிம மெம்பரேன்களை விட அதிகமாகும், மேலும் மாற்றுவதற்கான செலவை குறிப்பிடத்தக்க அளவு மிச்சப்படுத்தலாம். இந்த டேங்க்- நீர்மூழ்கி வகை, டாங்கை இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றம் ஆகிய இரண்டுக்கும் பயன்படுத்தி ஹைப்ரிட் செயல்முறையை இயலச் செய்கிறது.
  • முனையற்ற வடிகட்டும் துணி பயணிக்கும் ஃபில்டர் பிரஸ்
    கருவியை சுழலச் செய்து, எந்திரத்துக்கு புதிய துணியை இழுக்கும் அதே சமயம் பழைய துணியை கழற்றுவதன் மூலம், ஃபில்டர் துணியை மாற்ற இயலும். இந்த எந்திர நுட்பம் பராமரிப்புப் பணிச்சுமை மற்றும் மனித ஆற்றல்களைப் பெருமளவு குறைக்கிறது. கேக்கை வாருவதும் தேவையற்றது. உயர்ந்த செயல்திறன் மற்றும் அதன் கச்சிதமான அளவு ஆகியவையும் ஃபில்டர் பிரஸ்ஸின் அம்சங்களில் ஒன்றாகும்.
  • லோ ஹெட் லாஸ் டிஃப்யூஸர் (கே-மெம்பரேன்)
    Kubota-வின் சொந்த மெம்பரேன் பொருள் மற்றும் தனித்தன்மையான பிளவு வடிவமைப்பு ஆகியவை லோ ஹெட் லாஸ் (6kPa) உடன் உயர் ஆக்ஸிஜன் பரிமாற்ற வினைத் திறனை அடைந்தது. செராமிக் டிஃப்யூஸர்களைப் போல அதே ஆழத்தில் பொருத்தவும், ஆற்றல் நுகர்வைக் குறைக்கவும் இயலும் (வழக்கமான மெம்பரேன் டிஃப்யூஸரிலிருந்து 15~20% குறைவு). ஏரேஷன் ஷீட்டை மட்டும் மாற்ற இயலும்.

பயன்பாடு

Kubota-வின் நீர் தீர்வு.

சுத்திகரிப்பு ஆலை

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

தொழிற்சாலை நீர்/கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

உங்களது ஊரில் இந்தத் தயாரிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு:

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop