எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

எடையிடல் & அளவிடல்
கட்டுப்பாட்டு அமைப்புகள்

Kubota-வின் “தோற்றம் எடை போடுதல் மற்றும் அளவிடுதலில்” அமைந்துள்ளது. 1890-ம் வருடம், இந்த நிறுவனம் எடைக் கருவிகளுக்கான வார்ப்பிரும்பு எடைகளைத் தயாரிப்பதில் தொடங்கியது. 1924-இல், நாங்கள் எடைக் கருவிகளைத் தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற்று, எந்திர மேடை எடைக் கருவிகளையும் உள்ளடக்க எங்களது தொழிலை விரிவுபடுத்தினோம். அதுமுதல் “எடைபோடுதல் மற்றும் அளவிடுதல்” தொழில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றமடைந்து வருகிறது.
தொழில்துறையின் பல்வேறு எடைபோடுதல் தேவைகளுக்கு உதவுமாறு, தொழில்நுட்ப மேம்பாட்டின் முன்னணியில் நாங்கள் எப்பொழுதும் இருக்கிறோம். ஜப்பானின் கலைத்திறன் மேம்பாட்டுக்குப் பங்காற்றி வரும் Kubota, நவீன எடைபோடுதல் மற்றும் அளவிடுதல் தொழில்நுட்பங்களை நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததற்காக உள்நாடு மற்றும் வெளிநாடு ஆகிய இரண்டு இடங்களிலும் மிகவும் பாராட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்மாதிரி தயாரிப்பான கிராவிமெட்ரிக் ஃபீடர் “NX Feeder Series” மற்றும் பிளாஸ்டிக் பெல்லெட் ஸ்கிரீனிங் அமைப்பான “Super PLATON Series” ஆகியவை உற்பத்தித் துறையில் ஒரு புதிய போக்காகிவிட்டன.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை மீறுமாறு எடை போடுதல் மற்றும் கட்டுப்பாட்டுக்கு புதுமையான தொழில் நுட்பங்களை வழங்க Kubota தொடர்ந்து முயற்சிக்கும்.

 • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

அம்சங்கள்

உலகெங்கிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட ஆர்டர்

ஜப்பானில் எடைக் குறைப்பு ஃபீடரை 1981ல் உருவாக்கிய முதல் நிறுவனம் Kubota ஆகும். இந்த ஃபீடர், திட மூலப்பொருளை கொடுக்கப்பட்ட விகிதத்தில் வழங்குகிறது, மேலும் இது பெரும்பாலும் பிளாஸ்டிக்கை செயலாக்கம் செய்வதில் பயன்படுத்தப்படுகிறது. இதனால்; சிறு உருண்டைகள், பொடி மற்றும் திரவம் உட்பட பல்வேறு வகையான மூலப் பொருட்களைக் கையாள இயலும். நாங்கள் இந்த ஃபீடர்களில் 10,000க்கும் மேற்பட்டவற்றை அனுப்பியுள்ளோம், அவற்றில் 2,000 வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

FTC-இல் 10,000-க்கும் மேற்பட்ட சோதனைகள்s

எங்களது வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்க, எங்களது FTC (Feeder Technical Center)ல் செயல்திறன் சோதனைக்காக நாங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து மூலப்பொருட்களைப் பெறுவோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தீர்வுகளை வழங்கும் விதமாக 10,000-க்கும் மேற்பட்ட சோதனைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம், நானோபவுடர் மீதான சமீபத்திய சோதனை உட்பட. FTC-கள் மற்றும் சோதனைக் கருவிகள், ஜப்பான் மற்றும் பிற ஏழு ஆசிய நாடுகளில் அமைந்துள்ளன.

பிளாஸ்டிக் தயாரிப்புகளின் தரமேம்பாட்டுக்குப் பங்களித்தல்

சிறு அரிசி உருண்டைப் பிரிப்பான்களில் எங்களது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாங்கள் ஜப்பானில் முதல் பிளாஸ்டிக் சிறு உருண்டைப் பிரிப்பானைக் கண்டுபிடித்தோம். இந்தப் பிரிப்பான், நுண்ணிய மாசுகளை அவற்றின் நிறங்களின் அடிப்படையில் வகைப்படுத்தி அகற்றுகிறது. இவ்வாறு, Kubota, உயர் செயல்திறனுடைய பொறியியல் பிளாஸ்டிக், சுருள் மற்றும் பிறவற்றைத் தயாரிக்கும் ஜாப்பான் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மூலப்பொருள் தயாரிப்பாளர்களின் தரமேம்பாட்டுக்குப் பங்களிக்கிறது.

வரிசை

“NX Feeder Series” என்பதுதான் 30 வருடங்களுக்கும் மேலாக நமது மூலப்பொருள் கையாளுதல் அனுபவத்தைப் பயன்படுத்தி Kubota உருவாக்கிய முதல் ஃபீடர் ஆகும். பலவகையான மாடல்களிலிருந்து உங்களது செயல்முறைக்கான மிகச்சிறந்த ஃபீடரை நீங்கள் கண்டுபிடிக்கலாம். மேலும், தயாரிப்புகள் அனைத்தும் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது.

எங்கள் தொழில்நுட்பங்கள்

 • டயகனல் அஜிடேட்டர் அமைப்பு மூலம் நிலையான கட்டுப்பாடு
  அஜிடேட்டர் ஹாப்பருக்கு மிகவும் நெருக்கமாகச் சுழன்று, எடை மதிப்பு மீது குறைவான விளைவைக் கொடுப்பதால்
  குறைவான மூலப்பொருள் செங்குத்து இயக்கம். இது, நிலையான ஃபீடிங்கை சாத்தியமாக்குகிறது.
 • எதிர்மறை சுவர் கோண அமைப்பு
  எதிர்மறை சுவர் கோண வடிவமைப்பு காரணமாக மூலப்பொருள் அழுத்துதல் குறைக்கப்படுவதால் ஆண்ட்டி-பிரிட்ஜிங் செயல்பாட்டின் மேம்பாடு. இது, பரவலான மூலப்பொருள் பயன்பாடுகளைக் கையாள்கிறது.
 • மூலப்பொருட்களின் ஹை ஸ்க்ரூ ஃபில்-க்கான கட்டமைப்பு
  மூலப்பொருளை ஸ்க்ரூ பகுதிக்குள் அஜிடேட்டர் தள்ளுவதால் மூலப்பொருளின் ஸ்க்ரூ ஃபில் மேம்பாடு. நமது வழக்கமான சாதனத்துடன் ஒப்பிடும்போது, இது துல்லியமான மற்றும் நிலையான மூலப்பொருள் ஓட்டத்தை அடைகிறது.
 • புதிய கேமிரா ஸ்கேனிங் அமைப்பு
  வழக்கமான அமைப்புடன் ஒப்பிடும்போது கேமிரா மற்றும் ஒளியமைப்பு போன்ற உட்புற அமைப்பு மேம்பாடுகள் மூலம் கண்டுபிடிப்புப் பிழையைத் தீர்ப்பதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
 • ஆம்னி டிஃப்யூஷன் லைட்டிங் அமைப்பு மற்றும் ஃப்ளாட் LED பேக் லைட்டிங் அமைப்பு
  மூலப்பொருளுக்கான பிரதிபலிப்பு ஒளி ஆதாரமாக ஆம்னி டிஃப்யூஷன் லைட்டிங் அமைப்பும், ஒலிபரப்பு ஒளி ஆதாரமாக ஃப்ளாட் LED பேக் லைட்டிங் அமைப்பும் ஏற்கப்பட்டது. கண்டுபிடிப்பில் ஏற்படும் பிழைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலமும், பல்வேறு வகையான வடிவங்கள் உள்ள ஒளிபுகும் சிறு உருண்டையைச் சுற்றிலும் உண்டாகும் நிழலை அகற்றுவதன் மூலமும் அதிகத் துல்லியமான சோதனை சாத்தியமானது.
 • அதிவேக ஸ்கேனிங் விகிதம்
  புதிதாக உருவாக்கப்பட்ட என்ஜினை பட சுத்திகரிப்புக்காக ஏற்பது. ஸ்கேன் விகிதத்தை அதிகரிப்பது மற்றும் செங்குத்து ஓட்டத் திசையின் கண்டறியும் துல்லியத்தை அதிகரிப்பதன் மூலம் அந்நியத் துகளைக் கண்டறிவதைச் சாத்தியமாக்குதல்.

பயன்பாடு

உணவு பதப்படுத்தல் ஆலை

பிளாஸ்டிக் கலவை ஆலை

ஃபிலிம் செயலாக்க ஆலை

பிளாஸ்டிக் செயலாக்கத்தில் மாசு அகற்றம்

உங்களது ஊரில் இந்தத் தயாரிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு:

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop