எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

பயன்பாட்டு விதிகள்

Kubota கார்ப்பரேஷனின் இந்த வலைத்தளம் (வலைத்தளம்), Kubota கார்ப்பரேஷன் (Kubota) அல்லது அதனுடைய பிரதிநிதிகளால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் அவர்களின் உடைமை. பயன்பாட்டின் இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளை தயவுசெய்து படிக்கவும் ("விதிகள் மற்றும் நிபந்தனைகள்"); Kubota வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்துவது, விதிகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.

முன்னறிவிப்பின்றி விதிகள் மற்றும் நிபந்தனைகளை Kubota மாற்றக்கூடும். வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்தும்போதெல்லாம், மிகவும் சமீபத்திய விதிகள் மற்றும் நிபந்தனைகளைப் பார்க்கவேண்டியது உங்களுடைய பொறுப்பு. இந்த வலைத் தளம் Kubota, அதனுடைய துணை நிறுவனங்கள் மற்றும் பிறருடைய வலைத்தளங்களுக்கு இணைப்புகளைக் கொண்டிருக்கும். அதில் எந்த ஒரு வலைத்தளத்தையும் பயன்படுத்துவது, அந்த வலைத்தளங்களின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது என கவனத்தில் கொள்ளவும்.

தடைசெய்யப்படட் நடத்தை

வலைத்தளத்தைப் பயன்படுத்தும்போது பின்வருபவற்றை செய்யாமலிருக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்:

 1. எந்த ஒரு சட்டங்கள், ஒழுங்குமுறை விதிகள் அல்லது அவசரச்சட்டங்களையும் மீறுதல்
 2. குற்றச் செயல்களை செய்தல் அல்லது அதற்கு உதுவுதல்
 3. Kubota அல்லது எந்த ஒரு மூன்றாம் நபருக்கும் அனுகூலமின்மை, இழப்பு அல்லது சேதாரம் ஏற்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுதல்
 4. சொத்துரிமைகள் அல்லது தனியுரிமை போன்ற சட்டபூர்வ உரிமைகளை மீறுதல், Kubota அல்லது மூன்றாம் நபரின் பெயருக்கு களங்கம் விளைவித்தல்
 5. பொது ஒழுங்கு மற்றும் மரியாதை போன்றவற்றின் நிலையை மீறும் செயல்பாடுகளில் ஈடுபடுதல்
 6. Kubota மற்றும் மூன்றாம் நபர்களின் வலைத்தளம், சர்வர்கள், கணினிகள் அல்லது வேறு எந்த சொத்துக்கும் சேதம் விளைவிக்கும் நோக்கிலான மென்பொருள் அல்லது தரவு ஆகியவற்றை எந்தவிதத்திலும் பதிவேற்றுதல், பயன்படுத்துதல், விநியோகித்தல் அல்லது அளித்தல்.
 7. Kubota அல்லது மூன்றாம் நபருக்கு தவறுதலாக வழிகாட்டும் நோக்கில் மற்றொரு நபரின் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துதல்.
 8. Kubota வுக்கு பொருத்தமற்றதாகத் தோன்றும் வேறு ஏதேனும் செயல்பாடுகள்

மறுப்பு

வலைத்தள உள்ளடக்கத்தின் துல்லியம், நேரம் தவறாமை அல்லது கிடைப்புத்தன்மை ஆகியவற்றுக்கு Kubota உத்தரவாதம் அளிக்கவில்லை. வலைத்தளத்தில் உலாவுவது அல்லது பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் இழப்பு அல்லது சேதத்துக்கு Kubota பொறுப்பேற்காது.

வலைத்தளம் அல்லது சர்வரின் பாதுகாப்புக்கு Kubota உத்தரவாதம் அளிக்கவில்லை. பேரிடர், தொழிற்சாலைப் பிரச்சினைகள் அல்லது பராமரிப்பு போன்றவற்றால் ஏற்படும் சாதன நிறுத்தம்; கணினி வைரஸ்கள், சேதமான கோப்புகள் அல்லது வேறு ஏதேனும் இதுபோன்ற மென்பொருள் அல்லது தரவு; அல்லது தரவு சேதம், அங்கீகாரமற்று அணுகல்கள் அல்லது மூன்றாம் நபர்களால் வெளியிடப்படுதல் போன்றவற்றால் ஏற்படும் இழப்பு அல்லது சேதாரத்துக்கு Kubota எந்தவகையிலும் பொறுப்பேற்காது.

எந்தவித முன்னறிவிப்புமின்றி Kubota , வலைத் தளத்தின் உள்ளடக்கத்தை மாற்றலாம் மற்றும்/அல்லது திருத்தலாம், மேலும் வலைத்தளத்தின் மூலம் அளித்து வரும் சேவையை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தலாம். காரணம் எதுவாக இருந்தாலும், உள்ளடக்கத்தை மாற்றுவதாலோ அல்லது திருத்துவதாலோ மற்றும் வலைத்தளத்தை நிறுத்துவதாலோ அல்லது மூடுவதாலோ ஏற்படும் இழப்பு அல்லது சேதாரத்துக்கு Kubota பொறுப்பேற்காது.

சில நாடுகளில் அல்லது பகுதிகளில் கிடைக்காத தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை வலைத்தளம் அளிக்கக்கூடும். ஒவ்வொரு நாட்டிலும் அல்லது பகுதியிலும் தகவல் அளிக்கும் வகையில் வலைத்தளம் எல்லாநேரத்திலும் வடிவமைக்கப்படவில்லை.

பதிப்புரிமை மற்றும் வணிகச்சின்னங்கள்

மற்றபடி குறிப்பிடப்படாதவரை வலைத்தளத்தில் உள்ள ஆவணங்கள், குரல் பதிவுகள், படங்கள் மற்றும் பிற பொருள்கள் Kubotaவுக்கு சொந்தமானவை. வலைத்தளத்தில் உள்ள அனைத்து விஷயங்களும் பதிப்புரிமை சட்டங்கள் மற்றும் பொருத்தமான சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒப்பந்த விதிகளால் பாதுகாக்கப்பட்டவை. தனிப்பட்ட பயன்பாடு மற்றும் வலைத்தளத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள அளவு தவிர, நகலெடுத்தல், திருத்துதல், பதிவேற்றுதல், வெளியிடுதல், அனுப்புதல், விநியோகித்தல், மற்றவருக்கு அளித்தல், இடம் மாற்றுதல், விற்பனை செய்தல் மற்றும் இந்த வலைத்தளத்தில் எந்த ஒரு விஷயத்தையும் வெளியிடுதல் ஆகியவை Kubotaவிடமிருந்து எழுத்துபூர்வமான முன் அனுமதியின்றி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

இதிலுள்ள அல்லது ஒவ்வொரு உள்ளடக்கப் பக்கத்திலும் உள்ள இது தொடர்பான விதிகள் மற்றும் நிபந்தனைகள், வேறு ஏதேனும் விதிகள் மற்றும் நிபந்தனைகள் இருந்தால் அவற்றைப் புறந்தள்ளி முன்னுரிமை அளிக்கப்படும். வலைத்தளத்தில் கிடைக்கப்பெறும் மென்பொருள்கள் அதனுடைய உரிமையாளரின் பதிப்புரிமை பெற்றவை. பதிப்புரிமை சட்டங்கள் மற்றும் பொருத்தமான சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒப்பந்த விதிகள் ஆகியவற்றுடன், இதுபோன்ற மென்பொருளின் உரிமையாளருக்கும் இறுதிப்பயனருக்குமிடையிலான இறுதிப் பயனர் உரிம ஒப்பந்தத்தில் உள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் ஏற்ப இதுபோன்ற மென்பொருள் பயன்பாடு இருக்கும்.

வலைத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நிறுவனப் பெயர்கள், தயாரிப்பு பெயர்கள் மற்றும் சின்னங்கள் ஆகியவை Kubotaவின் வணிகச்சின்னங்கள் அல்லது பதிவுபெற்ற வணிகச்சின்னங்கள் ஆகும். வலைத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நிறுவனப் பெயர்கள், தயாரிப்பு பெயர்கள் மற்றும் சின்னங்கள் ஆகியவை Kubotaவின் வணிகச்சின்னங்கள் அல்லது பதிவுபெற்ற வணிகச்சின்னங்கள் ஆகும்.

பிற வலைத்தளங்களுக்கு இணைப்புகள்

வலைத்தளத்துடன் இணைக்கப்பட்ட அல்லது இதிலிருந்து இணைப்பு கொடுக்கப்பட்ட மூன்றாம் நபர் வலைத்தளங்கள், அது போன்ற மூன்றாம் நபர்களால் தனியாக இயக்கி பராமரிக்கப்படுகின்றன, இவை Kubotaவின் கட்டுப்பாட்டில் இல்லை. இணைப்பு அளிக்கப்பட்ட தளத்தின் இயக்குநரால் விதிக்கப்படும் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப இணைப்பு அளிக்கப்பட்ட தளங்களின் பயன்பாடு இருக்கும். இணைப்பு அளிக்கப்பட்ட எந்தஒரு தளத்தின் உள்ளடக்கத்துக்கும் Kubota பொறுப்பேற்காது. வலைத்தளத்தில் உலாவுவது அல்லது பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் இழப்பு அல்லது சேதத்துக்கு Kubota எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

இதுபோன்ற இணைப்பு அளிக்கப்பட்ட தளங்களில் தோன்றும் மற்றும்/அல்லது அளிக்கப்படும், எந்த ஒரு தயாரிப்பு மற்றும்/அல்லது சேவை, அவற்றின் உள்ளடக்கத்தை Kubota பரிந்துரைக்கிறது மற்றும்/அல்லது ஆதரிக்கிறது எனப் புரிந்துகொள்ளக்கூடாது. இங்கே உள்ள எதையும் கொண்டு இணைப்பு தரப்பட்டுள்ள தளங்களின் இயக்குநர்களுடன் Kubota இணைந்து செயல்படுகிறது அல்லது அது போன்ற உறவு உள்ளதாகப் புரிந்துகொள்ளக்கூடாது.

பயனர்கள் அளித்த தகவல்

ஏதேனும் கருத்துக்கள், கேள்விகள், தகவல், திட்டங்கள், சிந்தனைகள் இன்னபிறவற்றை Kubotaவுக்கு அனுப்புவதனால், பின்வரும் விதிகளுக்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு இதுபோன்ற கருத்துக்கள் கையாளப்படும்:

 1. கருத்துக்களை ரகசியமானதாகவோ அல்லது தனியுரிமை கொண்ட தகவலாகவோ Kubota கையாளாது.
 2. கருத்துக்களை எண்ணிப்பார்க்கவோ, மதிப்பிடவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ எந்தவித கடமைப் பொறுப்பையும் Kubota எடுத்துக்கொள்ளாது.
 3. இந்தக் கருத்துக்களைப் போன்ற அல்லது ஒரு பகுதி இதைப்போலவே இருக்கும் கருத்துக்களை Kubota ஏற்றுக்கொண்டால், Kubota எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் நஷ்டஈடு எதையும் தராது.

தனியுரிமைக் கொள்கை

சில விஷயங்களில், பெயர், அஞ்சல் முகவரி, மற்றும் தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை தளத்தில் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் பயனர்கள் உள்ளிடவேண்டிய தேவை அல்லது இதுபோன்ற தகவல்களை தேர்ந்தெடுக்கவேண்டிய தேவை இருக்கும்.
Kubota அல்லது அதனுடைய துணை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள தயாரிப்பு மற்றும்/அல்லது சேவை தொடர்பான செயல்பாடுகளுக்காக தனிப்பட்ட தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும் அல்லது அளிக்கப்படும். உங்கள் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்தவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ வேண்டாம் என வேண்டிக்கொண்டால், Kubota அவ்வாறு செய்யாது. உங்கள் தனிப்பட்ட தகவலை உறுதிப்படுத்த, சரிசெய்ய அல்லது நீக்குவதற்கு, வலைத்தளத்தில் உள்ள பொருத்தமான பக்கத்தின் மூலம் Kubotaவைத் தொடர்புகொள்ளவும்.
பின்வரும் நிபந்தனைகளின் கீழ் தனிப்பட்ட தகவலை மூன்றாம் நபர்களுக்கு Kubota வெளிப்படுத்தலாம்:

 1. இப்படி வெளிப்படுத்துவதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.
 2. வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள சேவைகள் மற்றும் தயாரிப்புகள் மூன்றாம் நபர்களுக்கு உள் ஒப்பந்தம் செய்யட்டிருத்தல்.
 3. பயனர்களிடமிருந்து வரும் கேள்விகளுக்கு எங்களின் துணை நிறுவனங்கள், முகவர்கள் அல்லது விற்பனையாளர்கள் பதிலளிப்பதற்கு ஏற்ற நிலையில் இருத்தல்.
 4. நீதிமன்றம் அல்லது சட்டம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு தேவைப்படுதல்.

சிறப்பான செயல்பாடுக்காக வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. குக்கிகளை ஏற்றுக்கொள்வதை மறுக்குமாறு உங்கள் உலாவியை நீங்கள் அமைக்கலாம்; இருப்பினும் "தனிப்பயனாக்கு" என்ற அம்சத்தை முடக்கிவிடும், மேலும் வலைத்தளத்துக்கு வருகை புரிபவர்கள் மீது பிற தடைகளை விதிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்களது தனியுரிமைக் கொள்கையை பார்க்கவும்.

குக்கீஸ் பயன்பாடு**

எங்களது உலகளாவிய தளம் பின்வரும் நோக்கங்களுக்காக குக்கீஸ்களைப் பயன்படுத்துகிறது:
 • பயனர்களின் எண்ணிக்கையையும் நெரிசலையும் பகுப்பாய்வு செய்ய
 • எங்களது சேவையை மேம்படுத்த

உலாவியின் அமைப்புகளைப் பயன்படுத்தி, உலகளாவிய தளத்தைப் பயன்படுத்துவோரால் குக்கீஸ்கள் அனைத்தையும் தடை செய்ய இயலும் அல்லது எங்களது உலகளாவிய தளம் குக்கீஸ்களை அமைக்கும்போது உங்களுக்கு அறிவிக்கப்படும் விதமாக உலாவியை அமைக்கலாம். அமைப்பு குறித்த விவரங்களுக்கு, தயவுசெய்து உங்களது உலாவியின் அறிவுறுத்தல்களைச் சரிபார்க்கவும்.
நீங்கள் எங்களது குக்கீஸ்களைத் தடை செய்தால், எங்களது சேவைகள் அனைத்தையுமோ, அதன் பகுதியையோ பயன்படுத்த இயலாமல் போகக்கூடும் என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

 • குக்கீ என்பது நீங்கள் ஒரு தளத்துக்குள் முதன்முறையாகச் செல்லும் சமயத்தில் உங்களது கணினியின் வன்தட்டில் சேமிக்கப்படும் ஒரு சிறிய கோப்பு ஆகும். குக்கீஸ்களைப் பயன்படுத்தும் இணையதளத்தின் எந்தப் பக்கத்தை கணினி பார்வையிட்டது என்பதை வெப் சர்வரால் கண்டறிய இயலும்.
எங்களது இணையதளத்தில் ஏதாவது தனிப்பட்ட தகவல்களை நீங்கள் சேமிக்காதவரை, எங்களால் தனிப்பட்ட நபர்களைக் கண்டறிய இயலாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

வலைத்தளங்களுக்கு இணைப்புகள்

இணைப்பு அளிக்கவேண்டிய வலைத்தளத்தின் URL மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய நபரின் பெயரை Kubotaவுக்கு தெரியப்படுத்தினால், நீங்கள் எந்த வலைத்தளைத்தையும் இந்த வலைத்தளத்துடன் இணைக்கலாம். இதனுடன் கூட, பின்வருபவற்றுக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்:

 1. வலைத்தளத்துடன் இணைப்பதன் மூலம் ஏற்படும் இழப்பு அல்லது சேதத்துக்கு Kubota எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
 2. வலைத்தளத்துக்கான இணைப்புக்காக Kubota பொறுப்பையோ அல்லது கடைமையையோ Kubota ஏற்றுக்கொள்ளவில்லை. வலைத்தளத்தில் இணைப்பு அளிப்பதால், Kubotaவிடமிருந்து எந்த உரிமையையும் பெற்றதாகாது.
 3. URL மற்றும் வலைத்தளத்தின் உள்ளடக்கம் ஆகியவை முன்னறிவிப்பின்றி மாற்றப்படலாம் அல்லது நீக்கப்படலாம். உள்ளடக்கம் மாற்றப்பட்டது அல்லது நீக்கப்பட்டது பற்றி அறிவிப்பு அளிக்கக்கூடாது.
 4. குறுக்கு இணைப்புகள் ஏற்படுத்தப்படாது.
 5. வலைத்தள உள்ளடக்கங்கள் Kubotaவுக்கு உரிமையானது என்பதை மூன்றாம் நபர்கள் தெளிவாகப் புரிந்துகொள்கிற வகையில் வலைத்தளம் காட்சிப்படுத்துவதை உறதிசெய்யவும், எ.கா. வலைத்தளம் மற்றும் வலைத்தளத்திற்குள்ளே தோன்றக்கூடாது.
 6. எங்கள் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தவேண்டாம்.
 7. பின்வருபவற்றைக் கொண்டுள்ள வலைத்தளங்களிலிருந்து இணைப்புகள் மறுக்கப்படும். மின்னஞ்சல்களிலும் வலைத்தளம் குறிப்பிடப்படாது:
 • பொது ஒழுங்கு மற்றும் பண்புடைமையின் தரநிலைகளை மீறும் அல்லது சட்டவிரோதமான உள்ளடக்கம் (கிரிமினல், சட்டவிரோதமான அல்லது சமூகவிரோத செயல்பாடுகளைத் தூண்டுதல்; வேற்றுமைப் பாராட்டுதல் உள்ளிட்டவை)
 • வயதுவந்தோருக்கான உள்ளடக்கம்
 • Kubota, அதனுடைய துணைநிறுவனங்கள் அல்லது ஏதேனும் ஒரு மூன்றாம் நபருக்கு அவமதிப்பூட்டுவதாக தோன்றும் உள்ளடக்கம்

பொருத்தமான சட்டங்கள் மற்றும் சட்ட அதிகாரம்

மற்றபடி குறிப்பிடப்படாதவரை, வலைத்தளப் பயன்பாடு, விதிகள் மற்றும் நிபந்தனைகள் ஜப்பானிய சட்டங்களின்படியே பொருள்கொள்ளப்படும். வலத்தளப் பயன்பாடு பற்றிய பிரச்சனைகள் மற்றும் சட்டச்சிக்கல்கள் அனைத்தும், மற்றபடி குறிப்பிடப்படாதவரை ஜப்பானில் உள்ள ஒசாகா நீதிமன்றத்தில்தான் முதலில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

pagetop